வனிதாவின் மகன் ஸ்ரீஹரி சினிமாவில் என்ட்ரியா?

vanitha and srihari
vanitha and srihari

பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகையுமான வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி விரைவில் ஒரு பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

சில குடும்ப பிரச்சனைகளால் வனிதா தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். குடும்ப விஷேசத்திற்குக் கூட வனிதாவை ஒதுக்கியே வருகின்றனர் விஜயகுமார் குடும்பம். சமீபத்தில் விஜயகுமார் பேத்தியின் திருமணத்திற்குக் கூட வனிதாவிற்கு அழைப்புவிடுக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் வனிதாவின் மகள் ஜோவிகா கடந்த பிக்பாஸ் சீசன் மூலம் பிரபலமானார்.

அதேபோல் சமீபத்தில் வனிதா தன் மகளுக்கு நடத்திய போட்டோ ஷூட் மற்றும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இதற்குக் காரணம் வனிதா தன் மகளை சினிமாவில் அறிமுகமாக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்று ரசிகர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் தற்போது ஜோவிகாவிற்கு முன்னதாகவே வனிதாவின் மகன் ஸ்ரீஹரி சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வனிதாவிற்கும் அவரது முன்னாள் கணவர் ஆகாஷிற்கும் பிறந்தவர்தான் ஸ்ரீஹரி. இருவருக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா பிறந்தப்பின் 2007ம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்தானது. அதே ஆண்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்துக்கொண்டார் வனிதா.

Srihari
Srihari

அந்தவகையில் விவாகரத்திற்குப் பிறகு மகன் ஸ்ரீஹரி தன்னுடன்தான் இருக்க வேண்டுமென்று ஆகாஷ் வழக்குக்கொடுத்தார். அதன்படி வழக்கில் வெற்றிபெற்ற ஆகாஷ் ஸ்ரீஹரியை அவரே வளர்த்து வருகிறார். ஆகாஷிற்கும் வனிதாவிற்கும் பிறந்த ஜோவிகா தனது அம்மாவுடன் வளர்ந்து வருகிறார். அதேபோல் வனிதாவிற்கு இரண்டாவது கணவருக்கும் பிறந்த ஜெய்னிதா தனது அப்பாவுடன் வளர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஸ்ரீஹரிக்கு இணையத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதிவிட்டார் வனிதா. அப்போது பிரபலங்கள் பலர் கமென்ட்டில் வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் ஸ்ரீஹரி நான் ஆகாஷின் மகன் என்று பதிவிட்டது அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஏப்ரல் மாதம் மட்டும் 4 பான் இந்திய படங்களின் அப்டேட்ஸ்!
vanitha and srihari

இந்தவகையில் மைனா, கும்கி, தொடரி கடைசியாக செம்பி ஆகிய படங்களை இயக்கிய பிரபு சாலமான் இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளது. அந்தப் படத்தில்தான் ஸ்ரீஹரி ஹீரோவாக நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. விரைவில் இதுத்தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவருகிறது.

தங்கை ஜோவிகாவிற்கு முன்னரே அண்ணன் ஸ்ரீஹரி களத்தில் இறங்கவுள்ளது சினிமா வட்டாரத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com