உருகிய மேக்கப், ஸ்ட்ரா உணவு: இந்தியன் சேனாதிபதியாக கமல் பட்ட 5 மணி நேர சித்திரவதை!

ஹாலிவுட் மேக்கப் கலையை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வர கமல்ஹாசன் சந்தித்த சவால்களின் பின்னணி.
ப்ரோஸ்தெட்டிக் மேக்கப்
ப்ரோஸ்தெட்டிக் மேக்கப்AI image
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ஸ்பெஷல் மேக்கப் என்பது நடிகர்களின் தோற்றத்தை முழுவதுமாக மாற்றுவதாகும். உதாரணத்திற்கு, அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் அவ்வை சண்முகியாக மாறுவதற்கு பயன்படுத்தப்பட்ட மேக்கப் முறையே ப்ரோஸ்தெட்டிக் மேக்கப். ரசாயனப் பொருட்கள் மூலம் புதிய வடிவங்களை உருவாக்குவதே இதன் பின்னணியில் உள்ள அறிவியல்.

ப்ரோஸ்தெட்டிக் மேக்கப்:

ப்ரோஸ்தெட்டிக் மேக்கப் என்பது ஒரு நடிகரின் முகத்தையோ அல்லது உடலையோ செயற்கையான முறையில் மாற்றி அமைப்பதாகும். இதற்கு லிக்விட் லேடெக்ஸ் (Liquid Latex), சிலிகான் (Silicone) மற்றும் ஜெலட்டின் (Gelatin) போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். இவை மனித உடலின் சருமம் போன்றே மிருதுவாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். சமீபத்தில் வெளியான 'தாய்க்கிழவி' படத்தில் ராதிகாவின் தோற்றத்தை மாற்ற இவற்றையே பயன்படுத்தியிருப்பார்கள்.

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப்

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப் என்பது நெருப்பு காயம், அடிபட்ட காயம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் மேக்கப் ஆகும். இவற்றிற்கு ரத்தம் மற்றும் CG தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவார்கள்.

இந்த மேக்கப் முறைகள் முதலில் வெளிநாடுகளிலேயே அதிநுட்பமாக, தத்ரூபமாக பயன்படுத்தினார்கள். ஆனால், இந்தியாவில் 1980 களில் வெறும் முகத்தில் புருவத்திற்கு பயன்படுத்தும் மையால் கோடு போடுவது, தாடி ஒட்டுவது, திருநீறு பயன்படுத்துவது என மிகவும் எளிமையாகவே மேக்கப் செய்தார்கள்.

இதையும் படியுங்கள்:
அர்ஜுன் தாஸின் த்ரில்லர் படம் 'கான் சிட்டி' எப்படி இருக்கு? உண்மை ரிப்போர்ட்!
ப்ரோஸ்தெட்டிக் மேக்கப்

இந்திய சினிமாவில் ப்ரோஸ்தெட்டிக் மேக்கப் மாற்றத்தைக் கொண்டு வந்த கமல்ஹாசன்

ஆனால், கமலஹாசனுக்கு இது பிடிக்கவே இல்லை. ஆகையால், இந்த மேக்கப் குறித்து தெரிந்துக்கொள்ள, ஒரு பெரிய ஹாலிவுட் படமான ராம்போ III (Rambo III - 1988) படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டார். என்னத்தான் கமல் தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக இருந்தாலும், இந்த மேக்கப் குறித்து தெரிந்துக்கொள்ள அவர் எந்த எல்லைக்கும் செல்ல தயாரானார்.

கமல் இந்த கலையைக் கற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ள மேக்கப் ஸ்டுடியோக்களுக்குச் சென்றார். ஸ்டார் ட்ரெக் மற்றும் மாஸ்க் போன்ற படங்களுக்காக அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் மேக்கப் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் (Michael Westmore) என்பவரிடம் அவர் பயிற்சி பெற்றார்.

அங்கு பல வாரங்களாக இக்கலையில் தான் கற்றுக்கொண்ட அனைத்தையும் தமிழ் சினிமாவில் கொண்டு வர நினைத்த கமல், இந்தியன் மற்றும் அவ்வை சண்முகி படங்களில் முயற்சி செய்துப் பார்த்தார்.

ப்ரோஸ்தெட்டிக் மேக்கப்
ப்ரோஸ்தெட்டிக் மேக்கப்AI image

வெயிலை வென்று ப்ரோஸ்தெட்டிக் மேக்கப் மூலம் சாதித்த இந்தியன் சேனாதிபதி

இந்தியன் படத்திற்காக கமலின் முகம் முழுவதும், அதாவது நாசியை தவிர முகம் முழுவதும் திரவ பிளாஸ்டர் ஊற்றப்பட்டது. நம் நாட்டின் வெயிலுக்கு லேடெக்ஸ் மற்றும் சிலிக்கான் ஒரு மிகப்பெரிய எதிரி. வியர்வை காரணமாக மேக்கப் பசைகள் கரைந்து, முகத் துண்டுகள் உப்பத் தொடங்கும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த மேக்கப்பைப் போட 5 மணி நேரம் ஆகும். ஆனால் அது வெறும் 4-5 மணி நேரம் மட்டுமே தாங்கும். மேக்கப் அசையாமல் இருக்கவும், புரோஸ்தடிக்ஸ் உடையாமல் இருக்கவும், கமல் கடுமையான குளிர்சாதன வசதி கொண்ட அறையில் இருக்க வேண்டியிருந்தது. மேலும், பல மாதங்களாக ஒரு ஸ்ட்ரா மூலம் திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டார். இவ்வளவு கஷ்டப்பட்டுதான் இந்தியன் படத்தின் சேனாதிபதி கதாப்பாத்திரம் உருவானது.

இக்கலையின் உச்சமாக கருதுவது 'தசாவாதரம்' படம் தான். ஏனெனில், இதில் 10 கதாப்பாத்திரங்களில் கமல் தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றிக் கொண்டார். இப்படித்தான் கமலஹாசனால் இக்கலை தமிழ் சினிமால் அறிமுகமாகி, பின், ஐ, எந்திரன் போன்ற பல படங்களில் வெற்றியும் கண்டது. இன்னும் சொல்லப்போனால், இந்திய அளவில் ப்ரோஸ்தெட்டிக் மற்றும் எஃபெக்ஸ் மேக்கப் கலைகளின் தலைச்சிறந்த கலைஞர் கமல்ஹாசன் என்றே கூறலாம்.

இதையும் படியுங்கள்:
90ஸ் கிட்ஸ் பேவரைட் தொடரில் இப்படி ஒரு விஷயமா... இணையத்தில் தீயாய் பரவும் காட்சி!
ப்ரோஸ்தெட்டிக் மேக்கப்

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், ஒரு திரைப்படக் கதாபாத்திரத்தின் தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பையும், ஹாலிவுட் தொழில்நுட்பத்தை தமிழ் சினிமா எப்படித் தழுவியது என்ற வரலாற்று அறிவையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். சாதாரண மேக்கப்பிற்கும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, திரைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான கலையை உங்களால் ரசிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com