"ஞாபகம் வச்சுக்கோங்க என் பேரு இதுதான்" வெளியானது படத்தின் பெயர்.. மிரட்டும் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்
Updated on

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து 35 வருடங்களுக்கு பிறகு KH 234 படத்தின் மூலம் இணைகிறார்கள். இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் மட்டும் இண்ட்ரோ வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்படும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருவது அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சியில் அவ்வபோது பல சுவாரஸ்யமான விஷயங்களை கமல்ஹாசன் பகிர்ந்துக்கொள்வார். அந்தவகையில் கடந்த 22ம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ப்ரோமோ வெளியானது. அதில் நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் புதிய படத்தின் பணிகள் அக்டோபர் 23ம் தேதி முதல் தொடங்க உள்ள என்றும், படத்தின் டீசர் நவம்பர் 7ம் தேதி (கமல்ஹாசன் பிறந்தநாள்) வெளியிடப்படும் என அப்டேட் கொடுத்தார்.

இந்த நிலையில் படத்தின் டைட்டிலும், ஒரு சிறிய க்ளிம்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. கமலின் 234வது படத்தின் பெயர் தக் லைஃப் என்று வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், போதி தர்மர் போன்ற பழைய உடையை அணிந்தவாறு நடிகர் கமல்ஹாசன் எனது பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர்; ஞாபகம் வச்சிக்கோங்க என கூறுகிறார். மேலும் பிறக்கும் போது கிரிமினல், கேங்ஸ்டருனு என் தலையில எழுதி வச்சிட்டாங்க என்று சொல்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சம்பவம் இருக்கு என கமெண்ட் தட்டி வருகின்றனர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் போன்ற படம் மாதிரி இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மணிரத்னம் இயக்கும் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு, ஜெயம் ரவி மற்றும் கதாநாயகியாக திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com