யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிக்கும் ஜோ பட நடிகர்!

Rio And Yuvan
Rio And Yuvan

கோலிவுட் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் படத்தைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக ஜோ பட நடிகர் ரியோ ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இளையராஜா ஒரு பக்கம் தனது பாடல்களினால் அனைவரையும் இன்றும் கவர்ந்து வருகிறார் என்றால், மறுபக்கம் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா தனது பாடல்களினால் இளைஞர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். பல உணர்வுப்பூர்வமான பாடல்களினால், உணர்வையே உருகவைக்கும் ஆற்றல் கொண்டவர் யுவன்.

இவர் இசையமைப்பது மட்டுமல்லாது, படங்களையும் தயாரித்து வருகிறார். அந்தவகையில் யுவன் தனது YSR ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே ப்யார் பிரேமா காதல், மாமனிதன், பொன் ஒன்று கண்டேன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றன.

அந்தவகையில் தற்போது யுவன் சங்கர் ராஜா புது படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ரியோ நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ரியோவிற்கு ஜோடியாக ஜோ படத்தில் நடித்த மாளவிகா மனோஜ் அல்லது அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி இருவரில் யாரேனும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக சினிமா துறையில் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது ரியோவின் கனவாகும். அதற்காக அவர் எடுக்காத முயற்சிகளே இல்லை. விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் இவர் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும், பல ஆண்டுகளாக வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்காமலே இருந்தது. ஆனால், அதன்பிறகு ஜோ என்ற படத்தின்மூலம் வெள்ளித்திரையிலும் தனது திறமையை வெளிக்காட்டி, புது பயணத்தைத் தொடங்கினார். அந்தப் படத்தில் ரியோவிற்கு ஜோடியாக நடித்த மாளவிகாவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்:
நடிகர் விஜய் 10th மார்க் இதுதான்... வைரலாகும் போட்டோ!
Rio And Yuvan

குறிப்பாக இவர்களின் ஜோடி பரவலாகப் பேசப்பட்டது. ஆகையால், அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்து படம் எடுக்க வேண்டும் என்றும் இயக்குனர்கள் ஒருபுறமும், அவர்கள் சேர்ந்து நடிக்கும் படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் மறுபுறமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக சமீபத்தில் ஒரு அப்டேட் வெளியானது. ஒரு புதிய படத்தில் மாளவிகா மற்றும் ரியோ இணைந்து நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து தற்போது யுவன் தயாரிப்பிலும் இந்த ஜோடி இணைய அதிக வாய்ப்பு உள்ளது என்றே சொல்லப்படுகிறது. மேலும் அறிமுக இயக்குனர் ஸ்வினித் என்பவர் இப்படத்தை இயக்கவிருக்கிறார். படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com