கமல் vs மோகன்! ஒரே நாளில் வெளியாகும் இரு படங்கள்!

Kamal vs Mohan
Kamal vs Mohan

காலையில் பிறந்தநாள் விழா... மாலையில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் முன்னிலையில் ஆடியோ ரிலீஸ். ரசிகர்கள் கொண்டாட்டம். இதெல்லாம் செய்வது இப்போது முன்னணியில் இருக்கும் எதோ ஒரு ஹீரோ என்று நினைத்தால் அது உங்கள் தவறு.

அதை செய்தது 1980 களில் பல்வேறு வெற்றிப்படங்களை தந்த நம்ம 'மைக் ' மோகனைத்தான். மூடு பனியில் அறிமுகமான மோகன் பலவேறு வெள்ளி விழா படங்களை தந்தவர். ரஜினி, கமலுக்கு இணையான ஹீரோவாக சினிமாவில் வலம் வந்தவர். இளையராஜா இசையில் இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது.

சினிமா விட்டு பல ஆண்டுகள் விலகி இருந்தவர் 'ஹரா' என்ற படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி தருகிறார். இரண்டாண்டுகள் நடந்த இப்படத்தின்  படப்பிடிப்பு முடிந்த பின்பு ரிலீஸ் தேதி நேற்று (மே 10 அன்று)  மோகன் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஜூன் 7' ஆம் தேதி 'ஹரா' படம் திரைக்கு வருகிறது. இந்த தேதியை மோகனே ரசிகர்கள் முன் அறிவித்தார்.

காலையில் முதியோர்களிடம் சென்று ஆசி வாங்கிய மோகன் மாலையில் சென்னையில் உள்ள மிகப்பெரிய அரங்கில் ரசிகர்களை சந்தித்தார். நான் இந்த அளவிற்கு உயர காரணம் ரசிகர்கள் தான். இவர்கள் முன்னால் நான் நடிக்கும் படத்தை லான்ச் செய்வதுதான் சரியாக இருக்கும் என நினைத்து ரசிகர்கள் முன் ஆடியோ வெளியிட்டு விழாவை நடத்தியுள்ளார். தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரசிகர்கள் தஙகள் அபிமான நட்சத்திரமான மோகனை காண வந்திருந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
Thuglife: ஜெயம்ரவிக்கு பதிலாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர்! யார் தெரியுமா?
Kamal vs Mohan

இத்தனை ஆண்டுகளுக்கு பின்பும் மோகனை காண  இத்தனை பேர் ஆர்வமாக உள்ளார்காளா என ஊடககத்தினர் வியந்தனர். ஹரா படத்தில்  மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் மகளே என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. "இந்த படம் உங்களை மகிழ்ச்சி படுத்தும். ஏமாற்றம் அளிக்காது. காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் அனைத்தும் கலந்த 2k கிட்ஸ்க்கும் பிடித்த படமாக ஹரா இருக்கும்" என்றார் மோகன். இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தாதா 87, பவுடர் போன்ற படங்களை இயக்கியவர். ஹரா படம் ஜூன் 7 அன்று வெளியாகிறது. அதே நாளில் கமலின் இந்தியன் 2 திரைப்படமும் வெளியாகிறது.1980 களில் கமல் நடித்த படமும் மோகன் நடித்த படமும் ஒரே நாளில் திரைக்கு வந்து போட்டி போட்டுள்ளன. அதே போன்ற சூழல் 2024 ல் நிகழ உள்ளது. ஜூன் 7  அன்று உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2, வெள்ளி விழா நாயகன் மோகனின் ஹராவும் திரைக்கு வர உள்ளன. வரும் ஜூன் மாதம் ரசிகர்களுக்கு தீபாவளியாக இருக்க போகிறது என்பது உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com