“இப்டி இருந்தான்தான்பா அரசியல வெற்றிபெற முடியும்" - விஜய்க்கு கனிமொழி அரசியல் அட்வைஸ்!

Kanimozhi and Vijay
Kanimozhi and Vijay
Published on

நடிகர் விஜய் அரசியலில் தடம் பதித்தது குறித்து கனிமொழி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு 10வது மற்றும் 12வது வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவ மாணவிகளை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததோடு ஊக்கத்தொகையும் வழங்கினார். இதுதான் அவர் அரசியலில் களமிறங்குவதற்கான முதல் படியாக அமைந்தது. காலை முதல் இரவு வரை அசராமல் மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார். இது பல மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அதன்பின்னர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அதேபோல், இந்தாண்டும் மாணவர்களை சந்தித்து பரிசுப் பொருட்களை வழங்கினார்.

சினிமா பிரபலங்கள் சிலர் அவரின் கட்சியில் சேர்ந்துக்கொள்ளலாமா என்று தாமே முன்வந்து கேட்டதாகவும், அதற்கு விஜய் மலுப்பி வருவதாகவும் கூட செய்திகள் பரவுகின்றன. 

சமீபத்தில்கூட கட்சி சார்பாக மூன்று சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும், விஜயே ஒரு சின்னத்தைத் தேர்ந்தெடுத்து விரைவில் தமிழக மக்களுக்கு அறிவிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இன்னொருபுறம் தனது கட்சியின் முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார் விஜய். மாநாடு நடத்த இடம் கொடுக்க விடாமல் அரசியல் அழுத்தம் இருப்பதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது.

இப்படி வேகவேகமாக கட்சி ஏற்பாட்டை செய்து வரும் விஜய்க்கு கனிமொழி ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார், அது என்னவென்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
பிரஷாந்த் நடிப்பில் ‘அந்தகன்’ திரைப்படம்: சில சுவாரசியத் துளிகள்!
Kanimozhi and Vijay

எம்பி கனிமொழி ஒரு பேட்டியில் பேசும்போது, “ விஜய்யை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். அவரது குடும்பத்துடன் பழக்கம் இருக்கிறது. தெளிவு மற்றும் கடின உழைப்பு இருந்ததால்தான் சினிமாவில் அவரால் இந்த இடத்திற்கு வர முடிந்தது. அதேபோல அரசியலில் பயணிக்க வேண்டும் என அவருக்கு அட்வைஸ் கூறுவேன்." என்று பேசியிருக்கிறார்.

அவர் கூறுவதும் ஒருவிதத்தில் நியாயம்தான். அதேபோல், விஜயும் அதனால்தானே சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகி, அரசியலில் முழுவதுமாக நுழைய போகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com