OTT தளத்திலும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் காந்தாரா!

kantara
kantara
Updated on

கன்னட தேசத்தில் கேஜிஎப் திரை படத்திற்கு பிறகு மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்ற திரைப்படமாக காந்தாரா படம் இருந்து வருகிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் படத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். பான் இந்தியா மூவியாக வெளியான இந்த காந்தாரா திரைப்படம் வெகுவிரைவிலேயே OTT தளத்திலும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே கன்னட சினிமா உலகில் பல்வேறு பான் இந்திய திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் கேஜிஎப், கே ஜி எஃப் 2 போன்ற படங்களை தொடர்ந்து காந்தாரா திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

காந்தாரா
காந்தாரா

இந்தப் படத்தை பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அதன் பின்னர் சில வாரங்கள் கழித்து தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது.

இத்திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் OTT தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . இது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. திரையரங்கில் வெற்றி பெற்றது போலவே காந்தாரா OTT தளத்திலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com