
மலையாள பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை ரஜிஷா விஜயன். கேரளாவை சேர்ந்த ரஜிஷா விஜயன் மலையாளத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி கதாநாயகியாக உள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், 2016-ம் ஆண்டு வெளியான 'அனுராக கரிக்கின் வெள்ளம்' என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சினிமாக்காரன், ஜூன், பைனல்ஸ், ஸ்டாண்ட் அப், லவ் ஆகிய படங்களில் தனது பாத்திரங்களுக்காக பாராட்டப்பட்டார்.
நடிகர் தனுஷ் , லால் , நட்டி சுப்ரமணியம், யோகி பாபு , கௌரி கிஷன் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தொகுப்பாளினியாக கலக்கிய ராஜீஷா சினிமாவிலும் கலக்கி வருகிறார்.
தற்போது 'சர்தார் 2' மற்றும் துருவ் விக்ரமின் 'பைசன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக பல்வேறு உடல்நலப்பிரச்னைகளால் ரஜிஷாவின் உடல் எடை அதிகரித்தது. இந்நிலையில், தற்போது இவரது உடல் எடை குறைத்து ஸ்லிம்மான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அட இது, ரஜிஷா விஜயனா ஆளே மாறிவிட்டாரே என கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார்.
கடந்த 6 மாதமாக தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் 15 கிலோ எடை குறைத்திருப்பதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்து இருக்கிறார்க.
உடல் பருமனாக இருக்கும் புகைப்படம் மற்றும் தற்போதைய உடல் எடை குறைத்த புகைப்படத்தை அவருடைய பயிற்சியாளர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள், ரஜிஷா விஜயனை இப்போது ஸ்லிம்மா சூப்பரா இருப்பதாகவும், அவரது விடாமுயற்சியை பாராட்டியும் வருகின்றனர்.