தரமான பொழுதுபோக்கு உறுதி: மோகன் ராஜா - கார்த்தி இணையும் 'கார்த்தி 31'!

குடும்ப உணர்வுகளுடன் உருவாகும் மோகன் ராஜாவின் 11வது படம்.
கார்த்தி 31
கார்த்தி 31
Updated on

தமிழ் திரையுலகில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி ஒன்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி, பிரபல இயக்குனர் மோகன் ராஜாவுடன் முதல் முறையாக கைகோர்க்க உள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

'தனி ஒருவன்', 'வேலாயுதம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா 'காட்ஃபாதர்' படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் இயக்குநராக களம் இறங்குகிறார்.

இந்த படம் அவரது இயக்கத்தில் உருவாகும் 11 வது திரைப்படம் ஆகும். மேலும் அவர் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் முக்கியமான தருணத்தில் இந்த புதிய கூட்டணி அமைந்திருப்பதால் இந்த படம் அவருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது நடிகர் கார்த்தியின் 31 வது திரைப்படம் ஆகும்.

குடும்ப உணர்வுகள், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ஹீரோயிசம் ஆகியவற்றை இணைக்கும் முழு நீள கமர்ஷியல் குடும்பப் பொழுதுபோக்கு படமாக இது உருவாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கார்த்தி 'சர்தார் 2', 'மார்ஷல்' உள்ளிட்ட படங்களில் பிஸியாக உள்ளார். இதற்கிடையில் மோகன் ராஜாவுடன் இணையும் இந்த புதிய படம் அவரது திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

கார்த்தி 31
கார்த்தி 31

அதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் என்பதால் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் தலைப்பு, கதாநாயகி, இசையமைப்பாளர் மற்றும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மணிரத்னம் படத்தின் ரகசிய கதை இதுதானா? ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா புதிய படம்!
கார்த்தி 31

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் இந்த கூட்டணி டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு வெளியானதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 'கார்த்தி க்கு மோகன் ராஜா வின் திரைக்கதை பாணி மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த கூட்டணி நிச்சயம் ஒரு வெற்றிப் படத்தைத் தரும்' என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..

குறிப்பாக மோகன் ராஜா வலுவான கதைக் களம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்கு பெயர் பெற்றவர் என்பதால் கார்த்தியின் இயல்பான நடிப்புடன் அது இணையும் போது ரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
விஜய் பையனா இது? ஹாலிவுட் ஹீரோ கூட அப்பாவை சேர்த்து படம் எடுக்க போறாராம்!
கார்த்தி 31

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ககப்படுவதால் இந்த புதிய கூட்டணி குறித்து தமிழ் திரையுலகில் இப்போதே பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது ‌.

நடிகர் கார்த்தியின் 31 வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது 'கார்த்தி 31' என்ற தற்காலிக பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தை மோகன் ராஜா இயக்குவது மிகவும் சிறப்பு என்றே சொல்லலாம்.

வரவிருக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் பிரத்யேகத் தகவல்களைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, சினிமா உலகத்துடனான உங்கள் தொடர்பை எப்போதும் புதுப்பித்து வைத்துக் கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com