பல வருடங்களுக்கு முன்பு ரிலீஸான படங்கள் ரீ ரிலிசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரஜினியின் பாபா, முத்து, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் படங்கள் தான் இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தன. இதனால் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படமும் ரீ-ரிலீஸாகியுள்ளது. அதேபோல் தனுஷின் 3, மயக்கம் என்ன படங்களும் சமீபத்தில் மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஆனாலும், கமலின் வேட்டையாடு விளையாடு மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூல் செய்தது. இருப்பினும் ரீ-ரிலீஸாகும் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதால் விஜயின் கில்லியும் அடுத்து களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் அடுத்த வரிசையில் வந்தது பையா திரைப்படம்.
கார்த்தியின் சினிமா பயணத்தில் பையா திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகவும் இதன் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில், தற்போது கார்த்தியின் பையா படத்தை ரீ ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.