ரியோ ராஜின் ராம் அண்ட் லீலா விமர்சனம்: ஏலியன் காதலியும் 6 மணி சஸ்பென்சும் – படம் எப்படி இருக்கு?

30 வயதிலும் திருமணம் ஆகாத ராம், மாலையில் ஆணாக மாறும் ஏலியன் லீலாவைக் கைபிடித்தாரா?
ராம் அண்ட் லீலா விமர்சனம்
ராம் அண்ட் லீலா விமர்சனம்
Updated on
ரேட்டிங்(3 / 5)

ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா நடிப்பில் வெளிவந்துள்ள படம் ராம் அண்ட் லீலா. 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார் ராம் (ரியோ ராஜ் ). இவரது அம்மாவிற்கு மகனுக்கு திருமணம் செய்யவில்லையே என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இருக்கிறது. பல பெண்களை காதலிக்க முயற்சி செய்கிறார் ராம். இருந்தாலும் எந்த பெண்ணும் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. ஒரு நாள் மின்சார ரயிலில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். அப்பெண்ணின் பெயர் லீலா என்று தெரிய வருகிறது.

சில நாட்களில் பழகி காதலை தெரியப்படுத்துகிறார். இருவரும் காதலிக்கிறார்கள் ஆனால் லீலா "ஆறு மணிக்கு மேல் என் வீட்டிற்கு நீ வரக்கூடாது போனும் செய்யக்கூடாது" என்று கண்டிஷன் போடுகிறார். இது பல நாட்கள் தொடரவே, பொறுக்க முடியாத ராம், லீலா வீட்டிற்க்கே சென்று என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.

ராம் அப்போதுதான் லீலா உட்பட அந்த குடும்பத்தில் உள்ள அனைவருமே வேற்று கிரகத்தை சேர்ந்த ஏலியன்கள் என்று தெரிய வருகிறது. லீலா, ஆறு மணிக்கு மேல் ஆணாக மாறுவார் என்ற விஷயமும் ராமிற்கு தெரிய வருகிறது. ஒரு பக்கம் ராமின் குடும்பத்தாரும், லீலா குடும்பத்தாரும் ராம்-லீலா திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். மாலை வேளையில் ஆணாக மாறும் லீலாவை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? என்று சொல்கிறது கதை.

ராம் அண்ட் லீலா விமர்சனம்
ராம் அண்ட் லீலா விமர்சனம்

பிளஸ்.. குஷ்பூ சுந்தர் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த டபுள் ஆக்கு பன்சி என்ற படத்தின் கதையை ஒத்து இருக்கிறது. இருந்தாலும் இந்தப் படம் திரைக்கதை வடிவமைக்கப்பட்ட விதத்திலும் உள்ளே உள்ள சில முடிச்சுகளிலும் டபுள் ஆக்குபன்சி படத்தை விட மாறுபட்டு இருக்கிறது. இப்போது 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாத ஹீரோ, அவர் சந்திக்கும் பிரச்சனைகள் சந்திக்கும் பெண்கள் அனைத்தும் காதலை புறக்கணிப்பது என்ற ரீதியில் படம் நன்றாக சென்று கொண்டிருந்தது.

படம் திடீரென்று மாறி ஏலியன்ஸ் பெண் ஆணாக மாறுவது போன்ற விஷயங்களுக்கு சென்ற பின்பு திரைக்கதை சற்று தடுமாறுகிறது. தடுமாறும் திரைக்கதை கடைசி அரை மணி நேரத்தில் சரி ஆகிறது. படத்தின் அரை கடைசி அரை மணி நேரம் சற்று ரசிக்கும் படியாகவும், நாம் யோசிக்க முடியாத அளவிலும் உள்ளது. முழுக்க பரபரப்புடன் சென்றிருந்தால் இது ஒரு காமெடி திரில்லர் படமாக வந்திருக்கும்.

அறிமுக நாயகி வர்த்திகா அழகாகவும் இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு குளோசப்பிலும் ஒரு சிறிய எக்ஸ்பிரஷனை காட்டி நம்மை ஈர்க்கிறார். தனக்கு ஏற்பட்டுள்ள பாலின வேறுபாடு என்ற விஷயத்தை சொல்லி அழும்போது மிகச் சிறப்பாக perform செய்கிறார். அழகாகவும், அதே சமயத்தில் நன்றாக

நடிக்க தெரிந்த ஒரு ஹீரோயின் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துவிட்டார் என்று தைரியமாக சொல்லலாம். ரியோ ராஜ் காமெடி காட்சிகளில் நன்றாக நடிக்கிறார். ஆனால் மற்ற சீன்களில் வழக்கம் போல இதற்கு முன்பு நடித்த படங்களில் நடிப்பது போலவே நடித்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
'மொத ராத்திரி' விமர்சனம் - ஆபாசம் இல்லாத காதல் த்ரில்லர்!
ராம் அண்ட் லீலா விமர்சனம்

தனது நடிப்பு பாணியை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் நல்லது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாளவிகா அவினாஷ் நடித்துள்ளார் தனது பையனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற தவிப்பு அவரது நடிப்பில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. தீபா வெங்கட், காத்தாடி ராமமூர்த்தி இருவரும் மிகவும் யதார்த்தமாகவும் ஆட்கள் இல்லாமல் நடித்துள்ளார்கள். அங்கிட் மேனனின் இசையில் பாடல்கள் நம்மை ஈர்க்கவில்லை. பின்னணி இசை சற்று பரவாயில்லை. மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு நேர்த்தியாகவும் தேவையான அளவிலும் இருக்கிறது.

மைனஸ்… படத்தில் இந்த ஒன் லைனுக்கு நிறைய நகைச்சுவை ஸ்கோப் இருக்கிறது. நகைச்சுவை ஆங்காங்கே இருந்தாலும் பட ம் முழுக்க ஒரு நகைச்சுவையாக தந்து இருந்திருந்தால் இப்படம் ஒரு நல்ல சிறந்த நகைச்சுவை படமாக வந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
தனியொரு ஆளாக படம் எடுப்பது சாத்தியமா? சங்ககிரி ராஜ்குமாரின் 'ஒன்' படம் தரும் சினிமா பாடம்!
ராம் அண்ட் லீலா விமர்சனம்

நகைச்சுவையில் இருந்து படம் பாதிக்கு மேல் தடம் மாறி செல்கிறது. இதை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது சில இடங்களில் திரைக்கதை சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

கடைசியாக… ஒரு ஆவரேஜ் ஆன பொழுதுபோக்கு படம் பார்க்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ராம் அண்ட் லீலா சரியான படமாக இருக்கலாம்.

ராம் அண்ட் லீலா விமர்சனம் மூலம், படத்தின் கதைக்களம், சுவாரஸ்யமான ஏலியன் கான்செப்ட் மற்றும் கடைசி 30 நிமிடத் திருப்புமுனைகள் குறித்த தெளிவான பார்வையைப் பெற்று உங்களின் நேரத்தையும் பணத்தையும் சரியாகத் திட்டமிட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com