"ஆடியோவில் இருப்பது என் குரல் இல்ல" சுசித்ரா முன்னாள் கணவர் பகீர்!

Suchitra ex-husband Karthik Kumar
Suchitra ex-husband Karthik Kumar

பாடகி சுசித்ரா சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் தனுசுடன் யாரடி நீ மோகினி படத்தில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில் அவர் பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரிந்தனர்.

தொடர்ந்து சுசித்ரா பிக்பாஸ் சென்று வந்த பிறகு மீண்டும் பல பிரச்சனைகள் கிளம்பியது. சுசித்ராவின் சமூக வலைதளப் பக்கத்தில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ் சினிமா பிரபலங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அது அந்த சமயத்தில் சர்ச்சையாகி அமைதியானது. தற்போது அந்த விவகாரம் மீண்டும் துளிர்விட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. அதில் பாடகி சுசித்ரா தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த ஆடியோவில் கார்த்திக் குமார், சுசித்ராவிடம் பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் அவர் பட்டியலின பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வைரலாகி வரும் ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் இல்லை என்று ஏற்கனவே கார்த்திக் குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து இருந்தார். இருப்பினும் அந்த ஆடியோ குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது இது குறித்து மயிலாப்பூர் துணை ஆணையரிடம் கார்த்திக் குமார் புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
விரைவில் லோகேஷின் LCU ஷார்ட் பிலிம்... எப்போது தெரியுமா?
Suchitra ex-husband Karthik Kumar

அந்த புகாரில் இணையத்தில் வைரல் ஆகி வரும் ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் அதை பரப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் மனு மீது விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com