
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரியாக ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். தற்போது அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இவருக்கும், ஆண்டனி என்பவருக்கும் காதல் மலர்ந்து, திருமணத்துக்கு தயாராகி இருக்கிறார்கள். துபாயில் தொழில் அதிபராக இருக்கும் கேரளாவை சேர்ந்த ஆண்டனியை, கீர்த்தி சுரேஷ் 15 வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இரு வீட்டாரும் காதலை ஏற்றுக்கொண்டதால் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் நண்பரின் கதைகளை கீர்த்தி சுரேஷ் மறுபதிவு செய்துள்ளார். அதில் சென்னையிலிருந்து கோவாவிற்கான சில போர்டிங் பாஸ்களை போட்டோவாக போட்டு அதில் தேதி டிசம்பர் 5 என குறிப்பிடப்பட்டு “மேலும், அது தொடங்குகிறது” என்று எழுதப்பட்டுள்ளது. அதில் ஒயின் கிளாஸ், சியர்ஸ் ஈமோஜி மற்றும் சிவப்பு இதயம் ஆகியவற்றைச் சேர்த்துள்ளார். மேலும் ஹேஷ்டேக் - "KAwedding" என உள்ளது.
கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் கூட்டாளியான தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12-ம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
இதற்கு முன், கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் எக்ஸ் தளத்தில் கசிந்தது. அழைப்பிதல் குறிப்பில், எங்கள் மகளுக்கு டிசம்பர் 12 அன்று திருமணம் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் ஆசீர்வாதங்களை நாங்கள் உயர்வாகக் கருதுகிறோம், அவற்றை உங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் வைத்திருப்பீர்கள் என்று உண்மையாக நம்புகிறோம். அவர்கள் ஒன்றாக தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் போது உங்கள் ஆசீர்வாதங்களைப் பொழிந்தால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அன்புடன் ஜி சுரேஷ் குமார் & மேனகா சுரேஷ் குமார் என அச்சிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு பக்தர்களோடு வரிசையில் நின்று சாமி கும்பிட்டார். அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம், ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். தங்கள் திருமணம் கோவாவில் நடக்கும் என்றும் கூறினார்.