Kerala story 2: கேரளா திரைத்துறையில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து உருவாகிறதா?

The Kerala Story
The Kerala Story
Published on

கடந்த ஆண்டு பல சிக்கல்களுக்கு நடுவில் வெளியான ஒரு படம்தான் தி கேரளா ஸ்டோரி. அந்தவகையில் தற்போது கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி, யோகிதா பிஹானி, சோனியா பவானி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கேரளாவில் காணாமல்போன  32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்டதும், தீவிரவாதிகள் அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியதும் படத்தின் கதையாக அமைந்தது.

இந்த படம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. திரையரங்கில் வெளியாவதற்கும் சர்ச்சையை உண்டு செய்தது. அதேபோல் ஓடிடி தளத்தில் வெளியாகவும் பல எதிர்ப்புகளை சந்தித்தது.

இப்படி என்னத்தான் தடைகள் வந்தாலும், அதனை எதிர்த்து படத்தை வெளியிட்டது மட்டுமல்லாமல், இப்படத்தின் 2ம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பிய ஒரு விஷயம் சினிமா துறையில் பாலியல் தொல்லை. குறிப்பாக கேரளா திரைத்துறையில் பெரிய புயலாக மாறியது. மாலிவுட்டில் ஹேமா கமிட்டி செயல்பட்டு வருகிறது. இதில் புகார்கள் அளிக்கப்பட்டன. அதேபோல், பல நடிகைகளும் பகீரங்கமாக தங்களது சினிமா பயணத்தில் எதிர்க்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை முன் வைத்தனர்.

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் கேரளா ஸ்டோரி 2 படம் உருவாகப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பெண்: இறுதி அத்தியாயத்தை நெருங்கும் அழகனின் காதல்!
The Kerala Story

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குநர் சுதிப்தோ சென் பேசியுள்ளார். “கேரளா ஸ்டோரி 2 படம் உருவாகிறது என்பது உண்மைதான். தற்போது இந்த படம் தொடர்பான ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்கும் ஹேமா கமிட்டி அறிக்கைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இது பொய்யான தகவல். அந்த தகவலில் உண்மை இல்லை.” என்று பேசினார்.

ஹேமா கமிட்டி குறித்த செய்தி மட்டுமே பொய் என்று கூறியிருக்கிறார். ஆனால், சினிமாத்துறையில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றிய படமா என்ற கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கவே வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com