கோலிவுட் vs டோலிவுட்: அடுத்தடுத்த மாதங்களில் மோதும் படங்கள்!

Ram Charan, Vijay, Ajith
Ram Charan, Vijay, Ajith
Published on

புஷ்பா 2, அனிமல் 2, தேவாரா, இந்தியன் 2, டாக்ஸிக் உட்பட பல பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. அந்தவகையில் பிரம்மாண்டமாக பல மாதங்களாக உருவாகி வரும் படங்கள் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து வெளியாகவுள்ளன. அதுவும் ஒரே நேரத்தில் டோலிவுட், கோலிவுட் பான் இந்திய படங்கள் வெளியாகி பெரிய க்ளாஷாக அமையவுள்ளது.

ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை வெளியாகவுள்ள இந்தப் படங்கள் தென்னிந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ட்ரீட்டாக அமையவுள்ளது.

ஆகஸ்ட் மாதம்:

கோலிவுட்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், ஸ்னேகா, லைலா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் The Goat திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அதேபோல் டோலிவுட்டில் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட Pushpa 2 The rule படம் வெளியாகவுள்ளது. புஷ்பா படத்தின் பாகம் 1 நல்ல வரவேற்பை பெற்றதால் புஷ்பா 2ம் பாகத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதற்கு இணையாக விஜய் படமான The Goat பெரிய எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது. ஆகையால் இது ஒரு தாறுமாறான க்ளாஷாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம்:

சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூர்யாவின் கங்குவா படமும், பவன் கல்யாண் நடிப்பில் எபிக் ஆக்ஷன் படமான They call him OG படமும் மோதவுள்ளன. இங்கு எப்படி சூர்யாவோ, அதேபோல் அங்கு பவன் கல்யாண். ஆந்திராவில் பவன் படமும் தமிழகத்தில் சூர்யாவின் படமும் செம்ம ஹிட் ஆகும் என்றாலும், இந்திய அளவில் எந்தப் படம் அதிகளவில் வெற்றிபெறும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

அக்டோபர் மாதம்:

அக்டோபர் மாதத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படமும், அதேபோல டோலிவுட்டில் பல மாதங்களாக வெளியீட்டுத் தேதி தள்ளிச்சென்றுக்கொண்டே இருந்த ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படம் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே சமமான எதிர்பார்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 'ஒயிட் ரோஸ்' - மணம் இல்லை!
Ram Charan, Vijay, Ajith

 நவம்பர் மாதம்:

இறுதியாக நவம்பர் மாதம்தான் உச்சக்கட்ட க்ளாஷ் காத்திருக்கிறது. ஏனெனில், அஜித்தின் விடாமுயற்சி படமும், தமிழ் இயக்குனர் சங்கர் முதல் முறையாக தெலுங்கில் எடுக்கும் Game changer படமும் மோதவுள்ளன. Game changer படத்தின் இன்னொரு சிறப்பு, ஹீரோ ராம் சரண்தான். ஆகையால் நேருக்கு நேர் மோதவுள்ள இந்தப் போட்டியே வெறித்தனமான க்ளாஷாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com