ட்ரெண்டிங்கில் இப்போ இந்த பாட்டுதான்!

Mahesh Babu
Mahesh Babu
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

கேஷ் பாபு நடிக்கும் குண்டூர் காரம் படத்தின் குர்ச்சி மடதப்பெட்டி பாடலின் ப்ரோமோ வெளியாகி எக்ஸ் தளத்தில் மகேஷ் பாபு ஹேஷ்டேகுடன் சேர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீ லீலா நடிக்கும் குண்டூர் காரம் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் எடுத்த இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளே ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். அதேபோல் சில பேட்ச்சப் படப்பிடிப்புகளும் இன்னும் படப்பிடிக்கப்பட்டு இருக்கிறது.

மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீ லீலா நடிக்கும் காட்சிகள் ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலின் அப்டேட் ப்ரோமோ வெளியானது. இந்த ப்ரோமோ 27 விநாடிகள் கொண்டவை. மேலும் இந்த ப்ரோமோவின் தொடக்கத்தில் கல பாஷா என்ற முதியவர் குர்ச்சி மடதப்பெட்டி என்ற வார்த்தையாய் ராகமாக பாடியிருப்பார். இந்த ஒரு ராகத்திற்கு மட்டும் அவர் 1 லட்சம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ப்ரோமோ தொடக்கத்தில் வரும் பீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நேற்று வெளியான இப்ப்ரோமோ இன்று ட்ரெண்டிங்கில் இருக்க முதல் காரணம் மகேஷ் பாபுவின் மாஸ் லுக் மற்றும் ஸ்ரீ லீலாவின் வெறித்தனமான லுக்கும்தான். படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட் கொடுக்கும் என்றே நம்பப்படுகிறது. பாக்ஷ் ஆஃபிஸ் ரிப்போர்ட்டின்படி இப்பாடல் திருவிழாக்காலங்களிலும் , நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்த ஏற்றப் பாடல் என்று கூறியுள்ளது. மேலும் இப்படத்தின் முழு பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com