Kavin
Kavin

இன்று மாலை 6 மணிக்கும் வெளியாகும் கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் அப்டேட்!

Published on

எலன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

கவின் கடைசியாக நடித்து வெளியான டாடா படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப்பெற்றது. இதனையடுத்து கவின் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் கூடின. அந்தவகையில் சென்ற ஆண்டே Kavin’s next என்று கவினுடைய அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து படத்திற்கு ஸ்டார் என்று பெயர் வைக்கப்பட்டதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

படத்தின் இயக்குனர் எலன் இதற்கு முன்னர் பியார் ப்ரேமா காதல், கிரகணம் ஆகிய படங்களை இயக்கினார். அதன்பிறகு தற்போது கவின் வைத்து ஸ்டார் படம் இயக்குகிறார். முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஹரிஷ் கல்யாணிடமே பேசப்பட்டது. பின்னர் சில காரணங்களால், கவின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனையடுத்து, எலன் தனது அடுத்தப் படத்தில் தனுஷுடன் இணையவுள்ளார் என்ற செய்திகள் கசிந்துள்ளன.

ஸ்டார் படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சினி சித்ரா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் பட்ஜெட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இது 10 முதல் 12 கோடி வரையிலேயே இருக்கும் என்று கூறப்படுகிறது.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு சென்ற ஆண்டே முடிந்துவிட்டது என்றும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஸன் வேலைகளால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இதையும் படியுங்கள்:
The GOAT படத்தில் கம்பேக் கொடுக்கும் விஜயகாந்த்… சூப்பர் நியூஸ்!
Kavin

அந்தவகையில், ஸ்டார் படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டப் படக்குழு இன்று மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இந்தப் போஸ்ட்டரில் கவின் மைக் முன் நின்று பாடுவது போன்ற புகைப்படத்துடன், ‘நட்சத்திரம் பார்க்க நாள் குறிச்சாச்சி’ என்று குறிப்பிட்டிருந்தது. இதனால், இது படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான அறிவிப்பு என்று சொல்லப்படுகிறது.

மாலிவுட்டில் தொடர்ந்து நல்ல படங்கள் வெளியாகி  வரவேற்பை பெற்று வருவதையடுத்து, கோலிவுட் சினிமாவின் கம்பேக்காக ஸ்டார் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com