இந்திய திரையுலகை பொறுத்தவரையில் எப்போதும் நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் இருக்கும். திரையிலும் அவர்களே நாயகர்களாக இருப்பார்கள். நடிகைகள் எப்போதும் முக்கியத்ததுவம் குறைந்த வேடத்தில் நடிப்பார்கள். இந்த நிலையை ஒரு பெண் மாற்றிக் காட்டினாள். 90-களில் ஆண் நடிகர்களை விட அதிக பாக்ஸ் ஆபிஸ் காட்டி இந்திய சினிமாவில் முதல் முறையாக 1கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார். அவர் வேற யாரும் அல்ல இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டாரான விஜய்சாந்தி தான்.
1990 இல் 'கார்தவ்யம்' என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அப்போது சிரஞ்சீவி, ரஜினி காந்த், அமிதாப் பச்சன் ஆகியோர் கூட 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவில்லை. விஜய் சாந்தியை தொடர்ந்து 2 வருடங்கள் கழித்து தான் சிரஞ்சீவி 1.25 கோடி ரூபாய் சம்பளத்தை 'ஆபத்பாந்தவுடு' திரைப்படத்திற்கு வாங்கினார். அமிதாப்பச்சன் எப்போது ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்ற தகவல்கள் இல்லை. ஆனால், அப்போது அமிதாப் மற்றும் ரஜினிக்கு விஜயசாந்தி பெரும் போட்டியாக இருந்தார். விஜயசாந்திக்கு பின்னர் ஶ்ரீ தேவி, மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் போன்றோர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகைகளாக வலம் வந்தனர்.
விஜயசாந்திக்கு பிறகு தான் ரஜினி ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். மன்னன் படத்தில் நடிக்கும் போது விஜயசாந்திக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதால் ரஜினிக்கு 1 கோடியோடு சில லட்சம் சேர்த்து கொடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் 1.25 கோடி சம்பளம் வாங்கி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார். அப்போது பிரபு தேவாவும் 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கி ரஜினிக்கு கடும் போட்டியாக இருந்தார். அப்போதைய பான் இந்தியா நடிகர் பிரபு தேவா தான்.
நடிகை விஜய்சாந்தி சாதரணமாக அதிக சம்பளம் வாங்கவில்லை. அவர் ரஜினி காந்த், சீரஞ்சிவியை விட அதிக வசூலை குவித்தார். அதனால் அவருக்கு அந்த சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், அமிதாப் பச்சனின் மார்க்கெட் இவர்களை விட பல மடங்கு அதிகம். ஆனாலும் பாலிவுட்டை பொறுத்த வரை நடிகர்களின் சம்பளம் தென்னிந்திய நடிகர்களை விட மிகவும் குறைவு தான். அமீர்கான் 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிசை தொடும் போது அவரது சம்பளம் 10 கோடியாக இருந்தது. அப்போது 50 கோடி மார்க்கெட் உள்ள தென்னிந்திய நடிகர்கள் 30 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தனர்.
விஜயசாந்தி தனது மார்க்கட் உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவை விட்டு விலகி விட்டார். அவர் சினிமாவை விட்டு விலகியதும் பல நடிகர்கள் இனி விஜயசாந்தியால் போட்டியில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு நீண்ட காலம் போராடிய அவர் அரசியலிலும் பெரிய செல்வாக்கை பெற்றிருந்தார். தொடர்ச்சியாக அவர் சினிமாவில் நடித்து இருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் அவருக்கே நிரந்தரமாக இருந்திருக்கும்.