பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்..!

லட்சுமி மேனன் - ஆரி
லட்சுமி மேனன் - ஆரி

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

பள்ளி பருவத்திலேயே ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த நடிகை தான் லட்சுமி மேனன். பல ஹிட் படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் மீண்டும் படிப்பை தொடர சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கும் லட்சுமி மேனனுக்கு தற்போது முன்பு போல பெரிய வாய்ப்புகள் வரவில்லை.

மீண்டும் அவர் ரீஎன்ட்ரியில் ஹிட் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ராஜசேகர பாண்டியன் இயக்கும் அந்த படத்தின் பூஜை நடைபெற்றதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?
லட்சுமி மேனன் - ஆரி

உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தை மெட்ராஸ் டெக் நிறுவனம் சார்பில் அருணாச்சலம் அனந்தராமன் தயாரிக்கிறார்.

இதில், மைம்' கோபி, வையாபுரி, ப்ளாக் பாண்டி, ஜெயிலர் தன்ராஜ், ஷெர்லி பபித்ரா, கனிமொழி உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜசேகர பாண்டியன் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். செம்பூர் கே.ஜெயராஜ், ராஜசேகர பாண்டியன் வசனம் எழுதியுள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி இருக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகச் சொல்லும் இந்தப் படத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும் இடம் பெறும் என கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com