ஒரே நேரத்தில் ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. என்ன தெரியுமா?

rajini
rajini

தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில், லால் சலாம் படத்தின் ரஜினி நடித்த க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகியுள்ளது.

மாபெரும் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். பல ஆண்டுகாலமாக சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார்.

சமீபத்தில் ரஜினியின் அட்டகாசமான நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மக்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி நடித்து கொண்டிருக்கும் 3 புதிய படங்கள் அடுத்த ஆண்டில் வரிசையாக வெளியாகவுள்ளது. முதலில் பொங்கலுக்கு லால் சலாம் படமும், அடுத்து கோடை விடுமுறையில் ரஜினியின் 170வது படமான வேட்டையன் படமும், தொடர்ந்து தீபாவளி சமயத்தில் தலைவர் 171வது படம் வெளியாகவுள்ளது.

இன்று ரஜினியின் பிறந்தநாளையொட்டி, கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு ரஜினியின் 170வது படத்தின் தலைப்பு வேட்டையன் என அறிவிக்கப்பட்டது. ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இவரின் தோற்றத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் லால் சலாமை கொண்டாடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com