லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதியை மாற்றி லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள லால் சலாம் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்துடன் சேர்த்து அயலான், கேப்டன் மில்லர், மிஷன் 1 என ஏராளமான படங்கள் பொங்கலுக்கு வரிசைகட்டின. ஆனால் திடீரென லால் சலாம் திரைப்படம் பொங்கல் வரிசையில் இருந்து விலகியது.
வெளியூரில் படமாக்கப்பட்ட காட்சிகளின் பிரதிகள் தொலைந்துவிட்டதாகவும், அதனை மறுபடி எடுக்க வேண்டும் எனவும் லால் சலாம் படத்தைச் சுற்றி உறுதிச் செய்யப்படாத வதந்திகள் பரவின. பேட்ச் வொர்க் இன்னும் முடியாததால் படம் பொங்கலுக்கு வராது என்று பலரும் தெரிவித்தனர்.
கடைசியில் அவர்கள் சொன்னபடி லால் சலாமின் பொங்கல் வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில் படத்தைத் தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் பிப்ரவரி 9 ஆம் தேதி லால் சலாம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘நம்ம தேர் திருவிழாவுக்கு அலப்பறை கிளப்ப நேரம் வந்தாச்சு… லால் சலாம் 2024 பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.