"விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன்" இணையத்தின் காக்கா கழுகு சர்ச்சை குறித்து பேசிய ரஜினிகாந்த்!

"விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன்" இணையத்தின் காக்கா கழுகு சர்ச்சை குறித்து பேசிய ரஜினிகாந்த்!
LalSalaamAudioLaunch

காக்கா கழுகு என ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் பேசிய ரஜினிகாந்த், தான் விஜய்யை கூறவில்லை என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். நடிகர் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி போனது. இந்த நிலையில் நேற்று சென்னையில் லால் சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், மகள் குறித்தும் லால் சலாம் படம் குறித்தும் நிறைய பேசியிருப்பார்.

பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேச்சை தொடங்கிய ரஜினிகாந்த், மகளின் பாசம் குறித்து பேசி குடும்பத்தையே நெகிழவைத்தார். தனக்கு ஐஸ்வர்யா இன்னொரு தாய் என கூறி அவரை கண்கலங்க செய்தார். மேலும் கடவுளிடம் பெண் குழந்தை கேட்டேன் அவரே வந்து பிறந்துவிட்டதாக மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

ஏற்கனவே ஜெயிலர் ஆடியோ லாஞ்சின் போது காக்கா கழுகு என குட்டி கதை கூறிய ரஜினியால், இணையத்தில் சர்ச்சை வெடித்தது. அதில், விஜய்யை தான் ரஜினி காக்கா என கூறுகிறார் என சொல்லப்பட்டு சச்சரவுகள் தொடங்கியது. இதுவரை வாய் திறக்காமல் இருந்த ரஜினிகாந்த் லால் சலாம் இசைவெளியீட்டு விழாவில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

என்னையும் விஜய்யையும் வைத்து காக்கா கழுகு என பேசப்படுவதை பார்த்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். நான் தர்மத்தின் தலைவன் நடிக்கும் போது சந்திரசேகர் அவரது 13 வயது மகன் விஜய்யை அறிமுகப்படுத்தினார். பையனுக்கு நடிப்பதில் ஆர்வம் என கூறினார். நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய். இன்று படிப்படியாக உயர்ந்து நல்ல நிலைக்கு வந்துள்ளார். எனக்கு அவர் போட்டி என்று கூறுவது மரியாதையாக இருக்காது. அதே போன்று தான் அவருக்கும் என்னை ஒப்பிடுவது மரியாதையாகவும், கௌரவாகவும் இருக்காது. எனக்கு எப்போதும் விஜய் போட்டியே இல்லை என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com