காதலர் தினத்தை முன்னிட்டு திரை அரங்குகளில் 12 படங்கள் வெளியாவது போலவே,ஓடிடி-யிலும் 12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.இவை அனைத்தும் தமிழ் டப்பிங்கில் கிடைக்கின்றன. அந்த பட்டியல் இதோ :
இன்று 11/2/2026 4 படங்கள்
நாளை 12/2/2026 3 படங்கள்
நாளை மறு நாள் 13/2/2026 5 படங்கள்
இவற்றில் ஒரு படம் மட்டும் 16+ மற்றவை அனைத்தும் 13+யு படங்கள் தான்.குடும்பத்துடன் பார்க்கலாம்
1. மன சங்கர வர பிரசாத் காரு.(2026) தெலுங்கு/தமிழ் @ ஜீ5 - 11/2/2026
சிரஞசீவி நடித்த மெகா ஹிட் படம் இது.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரிலீஸ் ஆன முதல் 28 நாட்களில் 400 கோடி வசூலித்த படம்.12/1/2026 அன்று திரை அரஙகுகளில் வெளியான இந்தப்படம் ரஜினிக்கு எப்படி ஒரு தம்பிக்கு எந்த ஊரு படம் அமைந்ததோ அப்படி சிரஞ்சீவி-க்கு அமைந்த பேமிலி காமெடி டிராமா.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளியான விஸ்வாசம் படத்தின் கதை தான்.ட்ரீட்மெண்ட்டில் காமெடி மசாலாவைத்தூவி இருக்கிறார்கள்.சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடிய படம் இது.
வடிவேலு பாணியில் தன்னையே கலாய்த்துக்கொண்டு சிரஞ்சீவி செய்யும் அலப்பறைகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இதில் சிரஞசீவி,வெங்கடேஷ்,நயன்தாரா,கேத்தரீன் தெரேசா நடித்திருக்கிறார்கள்.சிரஞ்சீவியின் உண்மையான பெயரையே டைட்டில் ஆக்கி விட்டார்கள்
குடும்பத்துடன் பார்க்கலாம்.தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது.
2.அனகனக ஒக்க ராஜூ (2026) : ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தான் -தெலுங்கு/தமிழ் @நெட் பிளிக்ஸ் 11/2/2026
நவீன் பாலி ஷெட்டி ,மீனாட்சி சவுத் ரி நடிப்பில் 14/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி 100 கோடி வசூலைத்தொட்ட காமெடிப்படம் இது.நெட் பிளிக்ஸ் இந்தப்படத்தை 19 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.
3.கோஹ்ரா (Kohra) - வெப் சீரிஸ் (பஞ்சாபி/ஹிந்தி/தமிழ்) - Netflix:11/2/2026
பஞ்சாபி மொழியில் வெளியான இந்த வெப் சீரிசின் இரண்டாம் பாகம் இப்போது வெளியாகி உள்ளது.தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது.இது ஒரு கிரைம் திரில்லர் சீரிஸ்.
இதன் முதல் பாகம் 15/7/2023 ல் வெளியாகி ஹிட் ஆனது.அதில் 6 எபிசோடுகள்.2023 பிலிம்பேர் விருது விழாவில். சிறந்த இயக்குநர்,சிறந்த சீரிஸ்,சிறந்த நடிகர், உட்பட 5 விருதுகளை வென்றது.
4.க்ராஸ் (Cross) - வெப் சீரிஸ் (ஆங்கிலம்/தமிழ்) - Amazon Prime:
இந்த அமெரிக்கன் வெப் சீரிஸ் தமிழ் டப்பிங் கில் வெளியாகிறது.க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் இது.மொத்தம் 8 எபிசோடுகள்.ஒவ்வொன்றும் சராசரி 50 நிமிடஙகள் டூ 60 நிமிடங்கள். மொத்தமாக 8 மணி நேரம் ஆகும்.
நாளை (பிப்ரவரி 12, 2026):
5. தலைவர் தம்பி தலைமையில் (தமிழ்) - Netflix:
ஜீவா நடித்த இந்தப்படம் லோ பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 25 கோடி வசூலைக் கொடுத்த படம்.நல்ல காமெடிப்படம்..
ஒரு திருமண வீடு மற்றும் ஒரு இழவு வீட்டிற்கு இடையிலான பகையை மையமாகக் கொண்ட கதை..இரு வீட்டாருக்கும் பகை.நாயகன் அவர்களை ஒரு பஞ்சாயத்துத்தலைவராக எப்படி டீல் செய்தான் என்பது தான் கதை
இந்தப்படத்தின் 25 வது நாள் விழாவில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு. ரூ 1500 மதிப்புள்ள பட்டு வேட்டி ,பட்டுப்புடவை பரிசாக வழஙகப்பட்டது
6 .பேபி கேர்ள் (மலையாளம்/தமிழ்) - Sony LIV:
நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த க்ரைம் திரில்லர் படம் இது. சமீபத்தில் திரைக்கு வந்த டிஎன்ஏ படத்தில் கட்டைப்பையில் குழந்தையைக்கடத்தும் ஒரு காட்சி பரபரப்பாக பேசப்பட்டது.அந்தக்காட்சி இந்தப்படத்திலும் வரும்.ஆனாலும் முழுக்க முழுக்க வேறு கதை.
குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் 2 மணி நேரம் போவதே தெரியாமல் விறுவிறுப்பாக நகரும்.இப்போது மலையாளத்தில் ரிலீஸ் ஆகிறது.அடுத்த வாரம் தமிழ் டப்பிஙகில் ரிலீஸ்.
ரன் டைம் 124 நிமிடங்கள்
7.பிரிடேட்டர் பேட் லேண்ட்ஸ் (Predator Badlands) - ஆங்கிலம்/தமிழ் - Jio Hotstar:
7/11/2025 அன்று திரை அரஙகுகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 105 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 184 மில்லியன் டாலர் வசூலை க்குவித்த படம்.இது ஒரு சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரில்லர் மூவி
நாளை மறுநாள் (பிப்ரவரி 13, 2026):
8. லவ் மீ லவ் மீ (Love Me Love Me) - ஆங்கிலம்/தமிழ் - Amazon Prime: கவனம்: இது 16+ வயதுடையவர்களுக்கான படம்.
தனது சகோதரனின் மறைவுக்குப்பின் ஒரு மாற்றம் வேண்டி நாயகி வேறு ஊர் ,வேறு ஸ்கூல் என சேர்கிறார்.அங்கே தன்னை மதிக்கும் நாயகனை சந்திக்கிறார்.இவர்களது காதல் ,ஊடல் மோதல் தான் கதை.
இது 16+ மூவி
ரன் டைம் 107 நிமிடங்கள்
9 வாண்ட்டட் (Wanted) - சைனீஸ் மூவி / தமிழ் - Lionsgate Play:
இது ஹீரோயின் ஓரியண்ட்டட். ஆக்சன் திரில்லர்.2008 ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஏஞ்சலினா ஜூலி நடித்த வாண்ட்டட் படக்கதைக்கும் ,இதற்கும் சம்பந்தம் இல்லை
10.தி ஆர்ட் ஆப் சாரா (The Art of Sara) - கொரியன் / தமிழ் - Netflix:
இது ஒரு வெப் சீரிஸ்.நாயகி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன்னைப்பற்றிய போலியான ஐ டி கிரியேட் செய்து உலவ விடுகிறாள்.அந்த அடையாளத்துடன் ஒரு டெட் பாடி கிடைக்கிறது.இதனால் ஏற்படும் குழப்பங்கள் தான் கதை
11..பாண்ட் வாலே (Bandwaale) - ஹிந்தி/தமிழ் - Amazon Prime:
இது ஹிந்தி வெப் சீரிஸ்.ஷாலினி பாண்டே ,ஜஹான் கபூர்,சஞ்சனா தீபு ,ஆசீஷ் வித்யார்த்தி,அனுபமா குமார். ஆகியோர் நடித்திருக்கிறார்கள்
12. ஜோஸ் காலேஜ் ரோடு ட்ரிப் (Joe's College Road Trip) - ஆங்கிலம்/தமிழ் - Netflix
இது நேரடியாக நெட் பிளிக்சில் ரிலீஸ் ஆகும் புதுப்படம்.தாத்தா ,அப்பா,மகன் ,பேரன் என காலேஜ் போகும் ரோடு ட்ரிப் காமெடி மூவி இது.தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது