திருமணம் செய்ய பிரபாஸுக்கு சோம்பேரி – ராஜமௌலி ஓபன் டாக்!

Prabhas and Rajamouli
Prabhas and Rajamouli

பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் இன்னும் திருமணம் செய்யாதது குறித்து இயக்குனர் ராஜமௌலி பேசியிருக்கிறார். கலகலப்பாக ஒரு பேட்டியில் சொன்ன அவரது பதில் தற்போது வைரலாகி வருகிறது.

பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில்  ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். Rebel Star என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் இருந்து வருகிறார். முன்னதாக, இவரின் படங்கள் ஃப்லாப் மற்றும் ஹிட் என கலந்த படங்களாகவே வெளிவந்துக் கொண்டிருந்தன.

ஆனால், பாகுபலி 1 மற்றும் 2 க்கு பிறகு இவரது மார்க்கெட் ஒரேடியாக உச்சத்தை எட்டியது. இதனால், அவர் பெரிய பட்ஜெட் படங்களில் அதிகம் கம்மிட்டாக ஆரம்பித்தார். பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2ம் பாகங்களின் வெற்றி, இவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. 500 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படங்களில்தான் பிரபாஸ் சைன் செய்தார்.

இதனால், அவர் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும், பாகுபலி படத்திற்கு பிறகு விமர்சன ரீதியாக அவருடைய படங்கள் வெற்றிபெறவில்லை என்றே கூறவேண்டும். சமீபத்தில் வெளியான சலார் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனையடுத்து தற்போது இந்தியா முழுவதும் பிரபாஸின் கல்கி படத்திற்குதான் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில், நடிகர் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.

சமீபத்தில் பிரபாஸ் ஒரு ஸ்டோரி போட்டிருந்தார். “இறுதியாக ஒரு முக்கியமான நபர் நம் வாழ்க்கையில் நுழையவிருக்கிறார். காத்திருங்கள்.” என்று பதிவிட்டிருந்தார். இது திருமணம் பற்றிய அறிவிப்பாக இருக்குமோ என்று அனைவரும் எண்ணினர்.

பாகுபலி படத்தின் மாஸ் ஹிட்டிற்கு பிறகு இயக்குனர் ராஜமௌலியும் பிரபாஸும் நெருங்கிய நண்பர்களானார்கள் என்ற செய்தி நம் அனைவருக்குமே தெரியும். அந்தவகையில், பிரபாஸ் இன்னும் திருமணம் செய்யாதது குறித்து ராஜமௌலி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
அர்ஜூன் மகளுக்கும் தம்பி ராமையா மகனுக்கும் டும் டும் டும்... வைரலாகும் போட்டோஸ்!
Prabhas and Rajamouli

அதாவது, பிரபாஸ் மிகவும் சோம்பேறி எனவும், திருமண விஷயத்தில் அவர் இப்படித்தான் சோம்பேறியாக இருப்பதாகவும் ராஜமெளலி கூறியுள்ளார். ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது, அவருக்கு பெரிய வேலையாக இருக்கிறதோ என்னவோ?. இந்த ஒரே காரணத்துக்காக தான் பிரபாஸ் இன்னும் திருமணமே செய்துகொள்ளவில்லை என்றே தான் நினைப்பதாக ராஜமெளலி பேசியுள்ளார். 

இந்த பதிலுக்கு ரசிகர்கள் அனைவரும் கிண்டலடித்து வரவதோடு, காலம் முழுக்க அவர் அப்படியே இருப்பதில் தவறே இல்லை என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com