என்னது லியோ முதல் நாள் வசூல் இவ்வளவுதானா? ரசிகர்கள் கவலை!

லியோ
லியோ

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலில் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. ஏற்கனவே லோகேஷ் - விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பலரும் லியோ படத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு நேற்று உலகமெங்கும் லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் சுமார் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிட்டனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு மற்றும் கேள்வி நிலவி வந்தது.

இந்த நிலையில், சினிமா துறையில் லியோ திரைப்படம் தமிழகத்தில் சுமார் 30 கோடி வசூலை தாண்டியுள்ளதாகவும், உலகம் முழுவதும் லியோ திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெயிலரின் முதல் நாள் வசூலை உலக அளவில் லியோ திரைப்படம் முறியடிக்க வில்லை. ஆனால் தமிழகத்தில் ஜெயிலர் முதல் நாள் வசூலில் 25 கோடி வசூல் செய்திருந்தது. அந்த சாதனையை மட்டும் லியோ திரைப்படம் முறியடித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com