நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து சூசகமாக பேசியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் கடைசியாக பேசிய நடிகர் விஜய் தனது பாணியில் குட்டி ஸ்டோரியை கூறினார். அப்போது காக்கா கழுகு என கூறி அரங்கத்தையே அதிர வைத்தார்.
மேலும் நான் ரெடி தான் வரவா பாடல் பாடி மேடையிலேயே நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து பேசிய அவர், உலகநாயகன்னா ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார் ஒருவர் தான், தல ஒருவர் தான் என்றும், தளபதிக்கு அர்த்தம் என்னவென விளக்கினார். அது மன்னர் சொல்வதை செய்வதே தளபதி வேலை என்றும், மக்களாகிய நீங்கள் சொல்லும் வேலையை செய்வதே தளபதியாகிய எனது வேலை என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விஜய்யிடம் சில கேள்விகளுக்கு பதில் கேட்கப்பட்டது. அப்போது 2026 என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய், 2025 க்கு அப்புறம் வர வருஷம் என்ன? உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடக்கப் போகுது. இன்னும் சீரியஸாவா… 2026 கப்பு முக்கியம் பிகிலு என்று பதில் அளித்தார்.
2026 இல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு விஜய் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறியதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.