திடீரென சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்... எவ்வளவு தெரியுமா?

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj
Published on

அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது 5 படங்களிலேயே அசைக்க முடியாத இடத்தை பிடித்து விட்டார். வெறும் லோகேஷ் யுனிவெர்ஸில் 10 படங்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவித்த அவர் 2 படங்கள் விஜய்யை வைத்தும், ஒரு படம் கமலை வைத்தும், ஒரு படம் கார்த்தியை வைத்தும், முதல் படம் மாநகரத்தையும் இயக்கி அசத்தினார்.

இவரின் அனைத்து படங்களும் ஹிட்டடித்த நிலையில், தற்போது அனைத்து சோஷியல் மீடியாவில் இருந்து விலகி ரஜினி படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் திடீரென நடிப்பு பக்கம் எண்ட்ரி கொடுத்த அவர், ஏற்கனவே சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலில் வந்தார். தொடர்ந்து தற்போது இனிமேல் ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து ரொமான்சில் கலக்கினார். சமீபத்தில் தான் இந்த பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் சுமார் ரூ.650 கோடிக்கு தியேட்டர் வெளியீட்டில் மட்டும் வசூலித்ததாக கூறப்படுகிறது. தற்போது இயக்கும் ரஜினிகாந்தின் படத்திற்கு கூலி என தலைப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
புதிய கனவு திட்டத்தை சொன்ன ராஜமௌலி... ஹிட்டடிக்குமா?
Lokesh Kanagaraj

ரஜினிகாந்தை பல்வேறு இயக்குனர்கள் தங்களது படங்களில் வித்தியாசமாக காட்டினாலும், லோகேஷ் கனகராஜின் மேக்கிங்கை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தனது சம்பளத்தை பல மடங்கு லோகேஷ் கனகராஜ் உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது கூலி படத்திற்காக சுமார் 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக அவர் இயக்கிய லியோ படத்திற்கு ரூபாய் 20 கோடி சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளிவந்தன. தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் கூட ரூ.60 கோடி சம்பளம் பெற்றதில்லை என்று லோகேஷ் கனகராஜ் குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com