விரைவில் லோகேஷின் LCU ஷார்ட் பிலிம்... எப்போது தெரியுமா?

லோகேஷ்
லோகேஷ்

லோகேஷின் எல்சியுவின் ஷார்ட் பிலிம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தனது 5 படங்களிலேயே அசைக்க முடியாத இடத்தை பிடித்து விட்டார். வெறும் லோகேஷ் யுனிவெர்ஸில் 10 படங்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவித்த அவர் 2 படங்கள் விஜய்யை வைத்தும், ஒரு படம் கமலை வைத்தும், ஒரு படம் கார்த்தியை வைத்தும், முதல் படம் மாநகரத்தையும் இயக்கி அசத்தினார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்றவை வெற்றிப் படங்களாக அமைந்தன. மேலும், அந்தப் படங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களான கமல், விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி போன்றவர்கள் நடித்தது அவரை நட்சத்திர இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இவரின் அனைத்து படங்களும் ஹிட்டடித்த நிலையில், தற்போது அனைத்து சோஷியல் மீடியாவில் இருந்து விலகி ரஜினி படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் திடீரென நடிப்பு பக்கம் எண்ட்ரி கொடுத்த அவர், ஏற்கனவே சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலில் வந்தார். தொடர்ந்து தற்போது இனிமேல் ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து ரொமான்சில் கலக்கினார். சமீபத்தில் தான் இந்த பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் சுமார் ரூ.650 கோடிக்கு தியேட்டர் வெளியீட்டில் மட்டும் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரீல் மருமகளை ரியல் மருமகளாக்கிய மெட்டி ஒலி சாந்தி!
லோகேஷ்

ரஜினிகாந்தை பல்வேறு இயக்குனர்கள் தங்களது படங்களில் வித்தியாசமாக காட்டினாலும், லோகேஷ் கனகராஜின் மேக்கிங்கை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த படத்திற்கு கூலி என தலைப்பிட்டுள்ளனர்.

எல்சியுவின் அனைத்து கதைகளும் வெற்றிபெற்ற நிலையில், இதன் தொடக்கத்தை ஷார்ட் பிலிம்மாக லோகேஷ் எடுப்பார் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தான் இயக்கியுள்ள ஷார்ட் பிலிமுக்கு ‘பிள்ளையார் சுழி’ என்று டைட்டில் வைத்துள்ளார் லோகேஷ். பிள்ளையார் சுழி என்றால் தொடக்கம் என்று அர்த்தம். அதன் படி பார்த்தல் எல்சியூ கதையின் தொடக்கத்தை கூறும் கதையென்பதால் ஷார்ட் பிலிமுக்கு ஏத்த டைட்டிலாக தான் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள இந்த ஷார்ட் பிலிமில் அர்ஜுன் தாஸ், நரேஷ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இணையதளத்தில் விரைவில் வெளியாகவும் உள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் ஷார்ட் பிலிம்முக்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com