ரஜினியின் கூலி LCUவில் வருமா? லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

Coolie
Coolie
Published on

லோகேஷின் எல்சியூவில் கூலி படம் வருமா என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட்டடித்துள்ளார்.

முதல் படமான மாநகரமே இவருக்கு பெரிய வரவேற்பை அளித்தது. சமீபத்தில் விஜய் - லோகேஷின் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுத்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 71 வயதாகும் ரஜினிகாந்த் இன்றளவிலும் அயராது தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பின் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து லோகேஷ் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இந்த படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட இந்த படத்தின் ரஜினி கெட்டப் குறித்த போட்டோ வெளியாகி கவனம் பெற்றது.

இதையும் படியுங்கள்:
அடுத்த அடி இதுதான்... விஜய் போடும் மாஸ்டர் ப்ளான்..!
Coolie

லோகேஷ் தனக்கென ஒரு யுனிவர்ஸை உருவாக்கி, தன் பட்டாளங்களை அதனுள் கொண்டு வந்துவிடுவார். அதாவது, இவரது ஒரு படத்தில் நடக்கும் சம்பவங்கள், மற்றொரு படத்திலும் எங்காவது வந்து லீட் கொடுக்கும்...! குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பில் லீட் கொடுக்கும்.

கூலி திரைப்படமும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடையதா என லோகேஷ் ரசிகர்களுக்கு ஆர்வம் எழுந்தது. குறிப்பாக இதுவும் LCUக்குள் வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இதற்கான பதிலை சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜே தெரிவித்துள்ளார். அதில், ரஜினி சாரின் படத்துக்கு நிகரான மாஸ் எலிமெண்டுகளுடன் கூடிய ‘பக்கா’ கமர்ஷியல் படமாக கூலி இருக்கும். இது LCUல வராது என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com