அடுத்த அடி இதுதான்... விஜய் போடும் மாஸ்டர் ப்ளான்..!

Vijay
Vijay
Published on

அரசியலில் குதித்த விஜய், தமிழக மக்களை கவர அடுத்த ஆயுதத்தை கையிலெடுக்கவுள்ளார்.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், முழுமையாக சினிமாவுக்கு டாட்டா காட்டி அரசியலுக்கு தாவியுள்ளார். தற்போது நடித்து வரும் GOAT படத்தை தொடர்ந்து ஒரே ஒரு படத்தில் மட்டுமே கமிட்டாகியுள்ளார். இதையடுத்து முழுவதுமாக அரசியலில் பணிகளில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொண்டு செய்து வந்த விஜய், தற்போது அவரே களத்தில் குதித்துள்ளார். தனது கட்சிக்கு தமிழக வெற்றிகழகம் என பெயர் சூட்டியுள்ளார்.

அரசியலில் வந்த பிறகு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் சந்தித்தார். தொடர்ந்து 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தினார். அதில், பல அரசியல் கருத்துக்களை பேசி அதிர வைத்தார். நீட் தேர்வு குறித்து பேசி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார். இதற்கான பணிகளை கழகத் தொண்டர்கள் படுதீவிரமாக செய்து வருகிறார்கள். மேலும் இப்போது ஐந்து மெகா திட்டங்களை விஜய் போட்டுள்ளார்.

கடந்த ஆண்டு முதலே பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை தொடங்கினார். இது கல்வி சார்ந்ததாக உள்ள நிலையில் அடுத்ததாக அரசியல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்த உள்ளார். அந்த வகையில் ஒரு மாநில மாநாடு, நான்கு மண்டல மாநாடு மற்றும் 10 மாவட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் முதல் கட்டமாக செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்தில் திருச்சியில் பிரம்மாண்டமாக முதல் மாநாடு நடக்க உள்ளது.

இதையும் படியுங்கள்:
ராதிகா செய்த செயல்... ரிலீஸ் ஆன ஈஸ்வரி...!
Vijay

அடுத்ததாக 100 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபயணம் மூலமாகவே சென்று மக்களின் கருத்துக்களை விஜய் கேட்கப் போகிறார். நடைப்பயணம் மூலமாக விஜய் செல்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவேற்றம் செய்த அடுத்த நாளே கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனர். கட்சிக்கு பெயர், கொடி மற்றும் சின்னம் என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆகையால் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கட்சி தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே 2026 இல் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை விஜய்யின் கட்சி ஏற்படுத்த உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com