ரஜினிக்காக லோகேஷ் செய்த மெனக்கெடல்! - கூலி பட ரகசியங்கள் அம்பலம்!

Coolie
Coolie
Published on

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. லோகேஷ் கனகராஜ், ஒரு சிறந்த தொழில்முறை இயக்குனர் என்பதை தனது விளம்பர உத்திகள் மூலம் நிரூபித்து வருகிறார். ஒரு நாளைக்கு ஒரு பதிவு, ஒவ்வொரு அப்டேட், ஒவ்வொரு பாடல் வெளியீடு என அடுத்தடுத்து தனது விளம்பரத் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தி வருகிறார்.

லோகேஷ், ஒரு நல்ல தொழில், சரியான விளம்பரத்தைப் பொறுத்தது என்பதைத் தெளிவாக உணர்ந்தவர். 'கூலி' திரைப்படம் வெளியாகும் தேதி வரை, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் இருக்க, அவர் தொடர்ந்து சிறிய சிறிய அப்டேட்களை வெளியிட்டு, ரசிகர்களைப் படத்தைப் பார்க்கத் தயார்படுத்தி வருகிறார். 'கூலி' படத்தின் ஏராளமான அப்டேட்டுகள், படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலை மேலும் தூண்டியுள்ளன. இத்துடன் லோகேஷ் நிறுத்த மாட்டார் என்றும், அடுத்தடுத்து இன்னும் பல பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவார் என்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

'கூலி' ஒரு பான் இந்தியா திரைப்படம் என்பதால், அதன் விளம்பரங்களும் அதே அளவுக்குப் பிரம்மாண்டமாக உள்ளன. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, 'கூலி' படத்தின் பெரும்பாலான காட்சிகள் உண்மையான இடங்களிலேயே படமாக்கப்பட்டுள்ளதாம். ஒரு சில காட்சிகள் மட்டுமே கிரீன் மேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
கூலி படப்பிடிப்பில் ரஜினி செய்த ரகசிய வேலை: லோகேஷ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Coolie

லோகேஷ் கனகராஜ் 'கூலி' படத்திற்காக மிகவும் மெனக்கெட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மேலும், படத்தில் அதிக அளவில் டூப் பயன்படுத்தப்படாததால், உண்மையான இடங்களிலேயே படப்பிடிப்பை நடத்த முடிந்தது என்றும் திரை வட்டாரங்களில் பேச்சுக்கள் நிலவுகின்றன. நாம் எவ்வளவுதான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், இயற்கையுடன் ஒன்றி வரும் படங்கள் மக்களின் மனதில் விரைவாகப் பதிந்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. 

இந்த யுக்தியையும் லோகேஷ் கனகராஜ் கையாண்டுள்ளார். எனவே, 'கூலி' திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 'கூலி' படத்திற்காக லோகேஷ் கனகராஜ் மிகவும் சிரமப்பட்டு, உண்மையான இடங்களைத் தேர்வு செய்து படத்தைத் தயாரித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com