மிரள வைக்கும் 'ஷைத்தான்'.. மாதவனின் பேய் பட ட்ரைலர் ரிலீஸ்..!

Shaitaan Movie
Shaitaan Movie

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

திகில் காட்சிகள் நிறைந்த ஷைத்தான் பட ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தமிழில் தனக்கேற்ற கதாபாத்திரங்கள் வருவதில்லை என கூறிய ஜோதிகா, மற்ற மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான காதல் தி கோர் படம் பாராட்டுகளைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வந்தார். தற்போது பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவரது நடிப்பில் அடுத்ததாக ஷைத்தான் என்ற பாலிவுட் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார்.இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி திகில் கிளப்பியுள்ளது. இதுவரை மாதவன் ஏற்று நடித்திராத ஒரு புதிய அலறவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரைலரை பார்த்த பிறகு படம் எப்போது ரீலீஸ் ஆகும் என்கிற எதிர்பார்ப்பை மக்களிடம் தூண்டியுள்ளது. ஷைத்தான் திரைப்படம் மார்ச் 8 திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com