மகாராஜா வருகிறார், பராக்! பராக்!

sethupathi's maharaja
sethupathi's maharaja

விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் மகாராஜா வரும் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படம் ரிலீசாக  இன்னும் இரு தினங்களே உள்ளன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படம் மகாராஜா. இந்த படத்தின் இயக்குநர் குரங்கு பொம்மை பட  கதையின் மூலம்  அனைவரையும் கவர்ந்த நிதிலன் சாமிநாதன். முன்னதாகவே இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியது. அதிலிருந்து இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி தோற்றமளிப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. அதில், லட்சுமியை காணோம் என அவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும் காட்சி, சண்டை காட்சி என விறுவிறுப்பாக சென்றது. அதில் அவர் குறிப்பிட்ட லட்சுமி யார் என வெளிப்படுத்தப்படாமலேயே இந்த ட்ரெய்லர் நிறைவு பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகும் விஜய் சேதுபதி!
sethupathi's maharaja

மேலும் இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் விஜய் சேதுபதி தொடர்ந்து ஈடுப்பட்டு  வருகிறார். அந்த வகையில், விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணியளவில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்துக்கொண்டு மகாராஜா திரைப்படத்தை குறித்து அதிக தகவல்களை பகிர உள்ளார்.

நான்கு சீசன்களை அடுத்து ஐந்தாவது சீசனாக தொடர்ந்து கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 5  நிகழ்ச்சியில் இந்த வாரம் கலந்துக்கொண்டு விஜய் சேதிபதி குக் மற்றும் கோமாளிகளுடன் நிகச்சியை சிறப்பிக்க உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com