இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi 50
Vijay Sethupathi 50

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா வருகின்ற வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தான் இயக்குநராக ஆசைப்படுகிறேன் என விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் புதுமுக நடிகர்கள் பலரும் ஒருசில படங்களிலேயே காணாமல் போகின்றனர். சில நடிகர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றனர். அவ்வகையில் வெகு விரைவிலேயே தமிழ்த் திரைப்பட உலகில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய விதம்தான், இன்று அவர் 50 படங்கள் வரை வெற்றிகரமாக நடிப்பதற்கு காரணம்.

எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அதனை மனதார ஏற்று சிறப்பாக நடிப்பது தான் இவரது ஸ்பெஷாலிட்டி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய திரைப்படங்கள் தான் ஆரம்பகால சினிமா பயணத்தில் விஜய் சேதுபதிக்கு பெரும் திருப்புமுனையாக இருந்தது. அதற்கு பின் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் காமெடி ஹிட் அடித்ததால் இவரின் மார்க்கெட் எகிறியது.

இதற்கு பிறகு பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி, வில்லன் நடிகராகவும் நடித்தார். குறிப்பாக விக்ரம் வேதா, மாஸ்டர் மற்றும் ஜவான் போன்ற திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்தன. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கையாகவும், ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் வயதான தாத்தாவாகவும் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிச்சம் போட்டு காட்டினார்.

தற்போது தனது 50வது படமான மகாராஜா திரைப்படம் இந்த வாரம் ஜூன் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஐதராபாத் நகரில் உள்ள அபர்ணா மாலில் புரமோஷன் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, "மகாராஜா திரைப்படம் எனது திரையுலக வாழ்வில் 50வது திரைப்படமாக அமைந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. திரைப்படத் துறையில் நடிகனாக எனது பயணம் நிறைவாக இருக்கிறது. ஆனால், முழு திருப்தி அடைய முடியவில்லை. படங்களை இயக்குவதில் நான் ஆர்வமாக உள்ளேன். இனி வரும் காலங்களில் விரைவிலேயே இயக்குநராக வலம் வருவேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
விஜய் சேதுபதி இந்தி கற்றுக்கொண்டது எப்படி தெரியுமா?
Vijay Sethupathi 50

"தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரிடமும் பலவற்றைக் கற்று வருகிறேன். எனது படத்திற்கு கிடைக்கும் பாராட்டுகள் மற்றும் விமர்சனங்களை நான் பாரபட்சமின்றி ஒன்றாகவே கருதுகிறேன். சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் நான் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். துபாயில் இருக்கும் புர்ஜ் கலிபாவில் எனது திரைப்படத்தின் போஸ்டர் வந்ததைப் காணும் போது பெருமகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என நான் சுற்றித் திரிந்தது துபாயில் தான். அங்கு எனது பட போஸ்டர் இருப்பதை கண்டு நான் மகிழ்ந்ததை வெளிப்படுத்த அளவேயில்லை" எனவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com