ஹாலிவுட்டில் ரீமேக்காகும் முதல் தமிழ் படம்: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' புதிய சரித்திரம்!

ஹாலிவுட் ரீமேக் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்; மெக்கனாஹி நடிக்கிறாரா?
Maharaja Hollywood
Maharaja Hollywood remakeIMDB , The guardian
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

வழக்கமாக தமிழ் சினிமா உலகில்,ஹாலிவுட் திரைப்படங்களை ரீமேக் செய்வதுதான் வழக்கமாக இருந்தது. இந்த ரீமேக்குகள் அந்த படத்தின் நேரடியான உரிமையை வாங்கி மறுபதிப்பு செய்தது இல்லை,பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் திரைக்கதையை தழுவி இங்கு திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. முன்பெல்லாம் அந்த திரைப்படங்கள் எந்த படத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது? என்ற உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. ஆனால், இப்போது இருப்பது டிஜிட்டல் யுகம் என்பதால், ஒரு சினிமாவின் ஒவ்வொரு காட்சியும் எங்கிருந்து சுடப்பட்டது? என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர்.

ஹாலிவுட் திரைப்படங்களை தமிழ் சினிமா காப்பியடித்த காலங்கள் சென்று, இப்போது ஹாலிவுட் திரையுலகம் ஒரு தமிழ் சினிமாவை ரீமேக் செய்ய உள்ளது என்பது, இந்திய சினிமா வட்டாரத்தையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் அதன் சந்தை சர்வதேச அளவிற்கு சென்றது தான். இதுக்கு முன்னர் ஹாலிவுட் சினிமா எந்த ஒரு தமிழ் சினிமாவையும் ரீமேக் செய்ததில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹாலிவுட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளனர். 2024 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தில் பாரதிராஜா , அபிராமி , அனுராக் காஷ்யப் , மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ஒரு குப்பைத் தொட்டியை மையமாகக் கொண்டு ஆரம்பித்து, அதன் தொடர்ச்சியாக வளர்ப்பு மகளுக்கும், வளர்ப்பு தந்தைக்கும், இடையேயான பாசப் பிணைப்புடன் கூடிய பழி வாங்கும் அதிரடியான கதை அம்சத்தினை கொண்டது.

Maharaja movie
Maharaja Movie scene koimoi

இந்த ​படத்தில் உள்ள பல திருப்பங்கள் படத்தின் சுவாரசியத்தை கூட்டுகிறது. நீண்ட காலமாக கதாநாயகனாக ஹிட் கொடுக்க முடியாமல் தவித்த விஜய் சேதுபதிக்கு இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழில் வெற்றி பெற்ற அந்த திரைப்படம், சீனாவிலும் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. மகாராஜா , விஜய் சேதுபதியின் முதல் ₹100 கோடி மார்க்கெட்டை தொட்ட திரைப்படமாகவும் , மொத்தமாக ₹200 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதித்துள்ளது.

இந்த திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 'மகாராஜா' படத்தின் ஹாலிவுட் ரீமேக் உரிமத்தை , ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் பட தயாரிப்புகள் 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில், இண்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் கதாநாயகன் மேத்யூ மெக்கோனஹி நடிப்பார் என்று சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

​மகாராஜா திரைப்படம் ஹாலிவுட் ரீமேக் ஆகும் வேளையில் , அதற்கு முன்னரே பாலிவுட்டில் அமீர்கான் இந்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். ஹாலிவுட்டில் மகாராஜா ரீமேக் தயாராகும் முன்னரே, ஹிந்தி திரைப்படத்தை நடித்து வெளியிட வேண்டிய கட்டாயத்தில் அமீர்கான் தற்போது உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com