Maidaan movie review in tamil
Maidaan movie review in tamil

விமர்சனம்: மைதான் - இந்திய கால்பந்தாட்ட 'கோச் ரஹீமாக' அசத்தும் அஜய் தேவ்கன்!

ரேட்டிங்(4 / 5)

எத்தனையோ விளையாட்டு வீரர்கள் நமது நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளார்கள். இந்த தலைமுறையினருக்கு கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டு துறை சார்ந்த வீரர்களின் பெயர்களும் தெரிந்திருக்க வாய்ப்பிலை.

1951 முதல் 1962 வரை இந்திய கால்பந்து அணியில் பல்வேறு வீரர்களை உருவாக்கி இந்தியாவிற்கு உலக அரங்கில் பெயர் வாங்கி தந்தவர் ரஹீம். இந்த ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் பாலிவுட் படமாக வந்துள்ளது அஜய் தேவ்கன் நடித்துள்ள மைதான். அமீத் ஷர்மா இயக்கி உள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Maidaan movie review in tamil
Maidaan movie review in tamil

கல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக இருக்கிறார் ரஹீம். ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் என பல மாநிலங்களிலிருந்து வறுமையில் வாடும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி தந்து இந்திய கால் பந்தாட்ட அணியில் விளையாட வைத்து பல்வேறு வெற்றிகளை குவிக்கிறார் ரஹீம்.

ரஹீம் மீது பொறாமை கொள்ளும் கால்பந்தாட்ட சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் மாநில ரீதியான பாலிடிக்ஸ் செய்து ரஹீமை கோச் பதவியிலிருந்து நீக்குகிறார். ரஹீம் சந்திக்கும் பிரச்னைகளும், சவால்களும்தான் ‘மைதான்.’

படத்தில் பெரிய ட்விஸ்ட் இல்லை. எந்த கதாபாத்திரங்களும் வந்து படத்தின் போக்கை மாற்றவில்லை. கையை நீட்டி பேசும் வசனங்கள் இல்லை. இத்தனை இல்லைகள் இருந்தும் படத்தை ரசிக்கும்படியான மேஜிக் இருக்கிறது. இந்த மேஜிக் நிகழ நடிப்பு, ஒளிப்பதிவு,எடிட்டிங், கலை, இயக்கம் என பல துறைகளின் பங்களிப்பும் இருக்கிறது.

Maidaan movie review in tamil
Maidaan movie review in tamil

ரஹீம் வாழ்ந்திருந்தால் இப்படிதான் அவமானத்தை சந்தித்திருப்பார், வேதனைபட்டிருப்பார் என்பதை ரஹீமாக வாழ்ந்து காட்டிவிட்டார் அஜய் தேவகன். நிராகரிப்பின் வேதனையை ஒரு வித சோகத்துடன் படம் முழுவதும் சொல்கிறார் அஜய். சாய்ராவாக பிரியா மணி கணவனின் வெற்றியை எதிர்பார்க்கும் சராசரி பெண்மணியாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஜெமினி ஸ்டூடியோஸ் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்ட 4 எவர்கிரீன் திரைப்படங்கள்!
Maidaan movie review in tamil

கால்பந்தாட்ட அலுவலகத்தில் ரஹீமை மீண்டும் ஏற்றுக்கொள்வது போன்ற ஒரு காட்சியை வைத்திருக்கிறார் டைரக்டர். இந்த ஒரு காட்சி போதும் திரை கலையின்மீது அவருக்கு இருக்கும் உண்மையான நேசிப்பை புரிந்துகொள்ள. பிரியா மணி ஆங்கிலம் கற்றுக்கொண்டு பேசும் காட்சியும் ஆஹா சொல்ல வைக்கிறது.

கல்கத்தாவின் டிராமும், நகரமும் ஆர்ட் டைரக்ஷனில் சிறப்பாக வந்துள்ளது. ரஹ்மானின் பின்னணி இசை தூள்! பாடல்களுக்கான இசை ஸோ ஸோ! துஷார் மற்றும் பியோடர் லாயிசின் ஒளிப்பதிவு டைரக்டரின் சிந்தனைக்கு கைகோர்த்துள்ளது.

பீட்டர் தங்கராஜ், துளசி தாஸ், பல ராம், PK என 1950களில் இந்திய கால்பந்தாட்ட அணியில் இடம் பிடித்த வீரர்களை கண் முன் கொண்டு வந்து வீரர்களை பெருமைப் படுத்திவிட்டார் டைரக்டர்.

விளையாட்டு வீரர்களின் வெற்றியையும் தோல்வியையும் விளையாட்டு மைதானம் முடிவு செய்யட்டும். அரசியல் மைதானம் முடிவு செய்ய வேண்டாம் என்கிறது இந்த மைதான்.

இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த கால்பந்தாட்ட வீரர்களை கண் முன் கொண்டு வந்த டைரக்டருக்கு ஒரு ராயல் சல்யூட்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com