'குட் நைட்' மணிகண்டனின் லவ்வர் பட ட்ரைலர் வெளியீடு.. எப்படி இருக்கு தெரியுமா?

'குட் நைட்' மணிகண்டனின் லவ்வர் பட ட்ரைலர் வெளியீடு.. எப்படி இருக்கு தெரியுமா?

மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மணிகண்டன் காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம், குட்நைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி நடித்த காலா படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் தனது அசாத்திய நடிப்பால் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இதையடுத்து சமீபத்தில் வெளியான குட்நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

இவரின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் அதற்கு அப்டேட் கிடைத்துள்ளது. தற்போது மணிகண்டன் புது படம் ஒன்றில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் பிரபுராம் வயாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் கௌரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மில்லியர் டாலர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு லவ்வர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

படம் முழுவதும் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளது தெரிகிறது. இருவரும் சேர்ந்திருப்பதைக் காட்டிலும், அவர்களின் பிரிவும், சண்டையுமே முதன்மையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான தமிழ் சினிமா படங்களைப் போல நாயகன் புனிதர் ஆகவும், நாயகியை எதிர்தரப்பில் சித்தரிக்கும் காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கிறது. இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com