திரை விமர்சனம்: மைலாஞ்சி - இசையில் வசீகரம், திரைக்கதையில் தடுமாற்றம்..!

mailanji review
mailanji review
Published on

இளையராஜா இசை அமைக்கும் பாடல்களுக்கும்,மற்ற இசையமைப்பாளர்கள் இசை அமைக்கும் பாடல்களுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. ராஜா சார் தனது இசையில் இடம்பெறும் பாடல்களில் பாடல் வரிகள் தொடங்கு வதற்கு முன்பு சில நிமிடங்கள் வாத்தியங்களின் இசையை ஒலிக்கச் செய்வார் பிறகு மெதுவாக பாடல் வரிகள் தொடங்கும். வாத்தியங்களின் அழகியலை தனது இசை வழியாக ரசிகனுக்கு புரிய வைப்பார் இளையராஜா.இதை தற்சமயம் தனது இசையில் வெளியாகி உள்ள மைலாஞ்சி படத்திலும் தந்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களில் சில வாத்தியங்களை முதலில் ஒலிக்க செய்து பாடல் வரிகளை தொடங்குகிறார் ராஜா சார்.இந்த படத்தின் பாடல்களை இளையராஜாவே எழுதியுள்ளார். இப்படத்தை எழுத் தாளர் அஜயன் பாலா இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் கதை என்ன என்பதை பார்ப்போம். ஊட்டி யில் வசிக்கும் இளம் பெண் சாரு. ( கிரிஷா க்ரூப்). இவரை ஊட்டி க்கு பறவைகளை படம் பிடிக்க வரும் சூர்யா ( ஸ்ரீ ராம் கார்த்தி ) காதலிக்கிறார். தனது காதலை சொல்ல வரும் சமயத்தில் தான் கதிர் என்ற நபரை காதலிப்பதாகவும், அவர் சென்னையில் இருப்பதாகவும் சொல்கிறார் சாரு. மேலும் கதிருடன் சேர்த்து வைக்க உதவி செய்ய சூரியாவிடம் உதவி கேட்கிறார்.

mailanji review
mailanji review

சூர்யாவும் இ-மெயில் மூலம் கதிரை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால் எந்த ரெஸ்பான்ஸ் இல்லை. சில மாதங்கள் கழித்து சாரு மனதில் மாற்றம் ஏற்பட்டு சூர்யா மீது காதல் மலர்கிறது. இந்த காதலை சொல்லலாம் என்று சாரு நினைக்கும் சமயத்தில் கதிர் வந்து நிற்கிறார். சாரு என்ன முடிவு செய்தார் என்று சொல்கிறது கதை. பெண்ணின் மனதில் உள்ள 'காதல் குழப்பத்தை' மையப்படுத்தி இயற்கை போன்ற படங்கள் இதற்கு முன்பு வந்துள்ளது. இந்த படங்களில் உள்ள திரைக்கதை சுவாரசியம் மைலாஞ்சியில் இல்லை. படம் முழுக்க ஹீரோ- ஹீரோயின் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த காட்சிகளில் எந்த பிடிப்பும் இல்லை. சிங்கம் புலி நகைச்சுவை செய்கிறேன் என்ற பெயரில் சலிப்பை தருகிறார்.

செழியனின் ஒளிப்பதிவு நம்மை ரசிக்க வைக்கிறது. ஊட்டியின் பனிப்புகை படர்ந்த குளிர் கேமராவில் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஹீரோயின் கிரிஷா குழந்தை தனமாக சிறப்பாக நடித்துள்ளார். இருந்தாலும் மெஜுடாக நடிக்க வேண்டிய இடத்தில் கூட குழந்தை தனமாக நடித்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம். ஹீரோ ஸ்ரீ ராம் கார்த்தி பல இடங்களில் ஒரே போன்ற முக பாவனைகளை காட்டுகிறார்.

இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு செழியன், பட தொகுப்பிற்கு ஸ்ரீ கர் பிரசாத், ஆர்ட் டைரக்ஷனுக்கு லால்குடி இளையராஜா என பல சிறந்த ஆளுமைகள் ஒன்று சேர்ந்து தங்க ளது பங்களிப்பை சிறப்பாக தந்திருந்தும்,சரியான திரைக்கதை இல்லாததால் இந்த மைலாஞ்சியை முழுமையாக ரசிக்க முடியவில்லை. நல்ல திரைக்கதையும், சரியான நடிகர்கள் தேர்வும் இருந்திருந்தால் மைலாஞ்சி இந்த காதலர் தினத்திற்க்கான சிறந்த காதல் படமாக வந்திருக்கும்.

ரேட்டிங் 2.5/5.

இதையும் படியுங்கள்:
‘உயிர் உள்ளவரை உஷா’ (1983) திரை விமர்சனம் : ரொமாண்டிக் டிராமா
mailanji review

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com