மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்!

Myithri
Myithri

பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’ என்னும் புதிய படைப்பை வெளியிடுகிறது; பொழுதுபோக்குத் துறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் ஆழமாக ஊடுருவிச்சென்று இது காட்சிப்படுத்துகிறது.

இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த 9 வலிமை மிக்க பெண்களின் பங்களிப்பு இதில் இருக்கிறது. பார்வதி திருவோத்து மற்றும் ரீமா கல்லிங்கல் போன்ற வெள்ளித்திரையில் மின்னும் திறமையாளர்கள், இந்து VS, ரத்தீனா பிளாத்தோட்டத்தில், இலாஹேஹிப்தூலா, ஸ்ரேயா தேவ் துபே, நேஹா பார்திமதியானி போன்ற வெள்ளித் திரைக்கு அப்பாலான துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், அபர்ணா புரோஹித் மற்றும் நெறியாளர் ஸ்மிருதி கிரண் போன்ற நிறுவனத் தலைவர்கள் ஆகியோர் இதில் பங்குபெறுகிறார்கள்.

இதன் பங்கேற்பாளர்கள் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகளை ஒப்புக்கொள்ளவும் தேவையான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்.

பிரைம் வீடியோ, பொழுதுபோக்குத் துறையிலுள்ள பெண்கள் ஒருவரோடொருவர் இணையவும், தொடர்பு கொள்ளவும், ஒத்துழைக்கவும் மைத்ரிக்காக ஒரு தனிப்பட்ட சமூக அமைப்புப் பிரிவை அறிமுகப்படுத்துகிறது, சமீபத்திய அமர்வின் நிகழ்வு சார்ந்த உள்ளடக்கத் தொகுப்பு இப்போது மைத்ரியின் யூ ட்யூப் பக்கத்தில் கிடைக்கிறது.

ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையிலிருக்கும் பெண்கள் தங்களது அனுபவங்கள், சவால்கள் மற்றும் சாதனைகள் குறித்து விவாதித்து, ஒரு நேர்மறையான மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசிப்பார்கள்.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், படைப்பாளிகள், திறமையாளர்கள், மற்றும் கார்ப்பரேட் தலைவர்கள் உட்பட இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையில் புகழ்பெற்ற ஒன்பது பெண் தொழில்முறை வல்லுநர்களின் கருத்துக்கள் இதில் இடம்பெறும். இதன் சமீபத்திய அமர்வில் பெண்களுக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குதல், அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்தல் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குதல் ஆகியவற்றைப்பற்றிய விவாதங்கள் நடைபெறும் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com