நான் வாசனை மற்றும் சுவையை அறியும் திறனை இழந்தேன் - தனது உடல்நிலை குறித்து மம்முட்டி உருக்கம்!

actor mamooty
actor mamootysource:keralakaumudi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நீண்டகாலமாக தன்னால் எந்த வாசனையையும் சுவையையும் உணர முடியவில்லை. அத்தகைய திறன்களை இழக்கும் போது தான் அதன் மதிப்பை நம்மால் உணர முடிகிறது என்று தன் உடல் நலம் குறித்து நடிகர் மும்முட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி, 'கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் 16 ஆவது ஆண்டு விழா கொச்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக Cochlear Implant அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த 'காதோடு காதோரம்' என்ற செவித்திறன் கருவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மம்முட்டி, இந்த முயற்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.

இசை உட்பட நாம் கேட்கும் அனைத்தையும், செவித்திறன் சவால் கொண்டவர்களுக்கு கேட்கச் செய்வது நல்ல விஷயம் என்று கூறியவர், கேட்கும் திறன் நமக்கு கிடைத்துள்ள ஒரு ஆசிர்வாதம். பிறவியில் இருந்து அது இல்லாதவர்களுக்கு அப்படியான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது சிறப்பானது என்றார். தனக்கு அப்படியான சில நபர்களை தெரியும் என்றும் கூறினார். ஒருமுறை படப்பிடிப்பின்போது செவித்திறன் சவால் கொண்ட ஒருவருக்கு நான் காது கேட்கும் கருவியை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அதை மாட்டிய சில நிமிடங்களிலேயே அவர் அதைக் கழற்றிவிட்டார். ஏனெனில், சத்தங்கள் என்பது அவருக்குப் புதியது; அதில் அவருக்கு எந்த அனுபவமும் இல்லை. அதனால் அதன் தேவையை அவர் உணரவில்லை. ஆனால், நமக்கு சில விஷயங்கள் இல்லாதபோதுதான் அதன் மதிப்பு புரிகிறது என்றார்.

கண் பார்வையும், கேட்கும் திறனும் மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது; சுவாசமும் கூட. சிலருக்கு சுவாசிக்க முடிந்தாலும் வாசனை உணர முடியாமல் கூட இருக்கும். அப்படித்தான் தனக்கு நீண்ட காலமாக வாசனை அறியும் திறன் இல்லாமல் இருந்தது என்றும், தன்னால் எதையும் நுகர முடியாமல் தவித்ததாகவும் கூறியவர், சுவை உணர்வும் தனக்கு சில காலத்துக்கு இல்லாமல் போய்விட்டதாக கூறியவர், இப்போது மெதுவாக அதிலிருந்து மீண்டு வருவதாகக் கூறினார். இது போன்ற திறன்களை இழக்கும் போது தான் அவற்றின் அருமை நமக்கு புரிகிறது என்று உருக்கமாகப் பேசினார்.

கடந்த ஆண்டு மம்மூட்டியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வந்தன. தற்போது அவரே தனது உடல்நிலை குறித்து பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. தற்போது மீண்டும் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்துள்ளவர் சமீபத்தில் அவர் நடிப்பில் களம்காவல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தபடியாக இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பாட்ரியாட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com