மம்முட்டியின் Turbo படத்தின் வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

Turbo
Turbo

மம்முட்டி நடிப்பில் அடுத்து வெளியாகும் Turbo படத்தின் வெளியிட்டுத் தேதியை படக்குழு அறிவித்ததையடுத்து, X தளத்தில் மம்முட்டி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படம் விமர்சன ரீதியாக ஹிட்டானது. மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் இப்படம், தென்னிந்தியா முழுவதும் ஹிட் கொடுத்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரம்மயுகம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் முழுவதும் Black and white ல் எடுக்கப்பட்டது ஒரு ப்ளஸ் என்றால், மம்முட்டியின் அசுரத்தனமான நடிப்பு பெரிய ப்ளஸாக அமைந்தது. அந்தவகையில், 27 கோடிக்கு எடுக்கப்பட்ட பிரம்மயுகம் படம் 85 கோடி வரை வசூல் செய்தது.

அதேபோல், பிரம்மயுகம் படம் வெளியாவதற்கு முன்னர் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த ‘காதல் தி கோர்’ படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் மம்முட்டி தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் ஹிட் கொடுத்தார். இதனால் மம்முட்டியின் அடுத்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது.

அந்தநிலையில் தற்போது மம்முட்டியின் அடுத்தப் படமான Turbo படத்தின் வெளியிட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது, ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. வியாஸக் இயக்கியுள்ள இப்படத்தை மம்முட்டியின் தயாரிப்பு பேனர்தான் தயாரித்துள்ளது. இதற்கு முன்னர் வியாஸக் மற்றும் மம்முட்டி ஆகியோர் ‘போக்கிரி ராஜா’ மற்றும் ‘மதுரராஜா’ அகிய படங்களில் இணைந்து பணியாற்றினர்.

அதேபோல் இப்படத்தின் எழுத்தாளர் மானுவல் தாமஸுடன் மம்முட்டி 'ஆபிரகாம் ஓஸ்லர்' என்றப் படத்தில் இணைந்து நடித்தார். மேலும், கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை துல்கர் சல்மானின் Wayfarer Films விநியோகம் செய்யவுள்ளது. மேலும், Turbo படத்தில் சுனில், அஞ்சனா ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
நாளை வெளியாகும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட்?
Turbo

இந்தநிலையில்தான் மம்முட்டியின் மிரட்டலான லுக்குடன் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. Turbo படம் உலக முழுவதும் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என்று போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது.

மம்முட்டி தயாரிப்பு நிறுவனத்தின் ஐந்தாவது படமான Turbo, ஒரு காமெடி-ஆக்ஷன் படமாக பட்டையைக் கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com