நாளை வெளியாகும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட்?

Lokesh Kanagaraj and Rajinikanth
Lokesh Kanagaraj and Rajinikanth

லோகேஷ் கனகராஜ் லியோ படத்தையடுத்து ரஜினியுடன் 'தலைவர் 171' படத்தில் கைக்கோர்க்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. இதனையடுத்து தற்போது லோகேஷ் படத்தின் அப்டேட் நாளை வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்ததையடுத்து, X தளத்தில் லோகேஷ் கனகராஜ் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்திற்காக சில மாதங்களாக ஸ்க்ரிப்ட் வேலைகள் செய்து வருகிறார். லியோ படத்தின் விமர்சன ரீதியானத் தோல்விக்குப் பிறகு, அடுத்த படத்தில் அதை சரிக்கட்ட வேண்டும் என்ற முடிவில், நேரம் எடுத்து ஸ்க்ரிப்ட் வேலை செய்து வருவதாக செய்திகள் வந்தன.

இதற்கிடையே லோகேஷ் நடிப்பிலும் களமிறங்கியிருக்கிறார். முதலில் சிங்கப்பூர் சலூன் படத்தின் மூலம் நடிப்பில் அறிமுகமான லோகேஷ், அதன்பின்னர் ஸ்ருதி ஹாசனுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார்.

அதே நேரத்தில், ரஜினிகாந்தும் தொடர்ந்து நிறைய படங்களில் கம்மிடாகியிருக்கிறார். சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு பெரிய பட்ஜெட் படமாக உருவாகவுள்ள நிலையில், தலைவர் 171 படத்தின் அப்டேட் மட்டும் பல நாட்களாக வெளியாகவே இல்லை.

இதனையடுத்து ரசிகர்கள், தலைவர் 171 படத்தின் அப்டேட் கேட்கத்தொடங்கினர். இந்நிலையில்தான் தற்போது லோகேஷ் படத்தின் அப்டேட் நாளை வெளியாகவுள்ளது என்ற செய்திகள் கசிந்துள்ளன. இது லோகேஷ் படத்துடைய தலைப்பு அறிவிப்பு போஸ்ட்ராக இருக்கும் என்று கூறப்படுகிறது. லோகேஷ் அடுத்த படத்தின் Title announcement என்று சொல்லப்படுவதால், இது தலைவர் 171 படத்தின் பெயர் அறிவிப்பாக இருக்குமா? அல்லது லோகேஷின் அடுத்தப் படத்திற்கான அப்டேட்டா? என்று குழப்பம் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
நாகேஷின் அபார நடிப்பில் ‘சோப்பு, சீப்பு, கண்ணாடி’ திரைப்படக் காட்சி உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்!
Lokesh Kanagaraj and Rajinikanth

மேலும் சன் பிக்சர் தயாரிக்கப்போகும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், ராகவா லாரன்ஸ் மற்றும் சாண்டி மாஸ்டர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. அதேபோல் ப்ரிதிவிராஜ் அல்லது மம்மூட்டி ஒரு முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து நாளை வெளியாகவுள்ள லோகேஷ் படத்தின் டைட்டில் அறிவிப்பு ஒரு பெரிய அப்டேட்டாகவே இருக்கும் என்று ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com