மாநகரம் ஸ்ரீ - சானியா ஐயப்பன்
மாநகரம் ஸ்ரீ - சானியா ஐயப்பன்

மாநகரம் ஸ்ரீக்கு திருமணம் ஆகிடுச்சா? வைரலாகும் போட்டோ!

Published on

மலையாள திரையுலகின் இளம் நடிகை சானியா ஐயப்பன் இயக்குனர் லோகேஷ் கனகராஜன் முதல் படமான மாநகரம் படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீயை திருமணம் செய்துக் கொண்டது போன்ற புகைப்படத்தை சற்றுமுன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதுடன் ஸ்ரீயின் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ ஹீரோவாக நடித்த மாநகரம் படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றதுடன் நல்ல வசூலையும் பெற்றது.

மலையாளத்தில் 2018ல் வெளியான குயின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சானியா ஐயப்பன். இந்த நிலையில் இருவருக்கும் மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் உண்மையென்னவென்றால் நடிகர் ஸ்ரீ, நடிகை சானியா ஐயப்பனுடன் இணைந்து இறுகப்பற்று படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள திருமண காட்சி தான் அந்த போட்டோ என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதே படத்தில் இருவரும் ஆபிஸ் லிப்டில் செல்லும் ஒரு புதிய போட்டோவும் வெளியாகி உள்ளது. இதனை கண்ட பிறகு ரசிகர்கள் அப்பாடா என பெருமூச்சு விட்டனர்.

logo
Kalki Online
kalkionline.com