5 நாட்களில் லவ்வர் படம் செய்த சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா?

லவ்வர்
லவ்வர்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

குட்நைட் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

தனது நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் மணிகண்டன். இவர் ஹிரோவாக நடித்து கலக்கிய படம் தான் குட்நைட். இந்த படம் காதலர்கள், தம்பதியினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த நிலையில் புதுமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் லவ்வர் என்ற திரைப்படத்தில் கதாநாயகன் நடித்துள்ளார்.

இதில் கவுரி பிரியா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்துள்ளது. சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் தற்போதைய சமூகத்தில் நிலவும் காதல் நிலவரத்தை எடுத்துரைத்தது என்றும், மேலும் ஆண் பெண் உறவு பற்றிய ஒரு உரையாடலாக இருந்தது எனவும் பேசப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்து லவ்வர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, லவ்வர் திரைப்படம் ரூ. 6 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு அதிகரிக்க போகிறது என்பதையும் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com