மலையாள சினிமாவில் புதிய சாதனை படைத்த 'மஞ்சுமல் பாய்ஸ்'..!

Manjummel Boys
Manjummel BoysImg Credit: Radio city

சினிமா துறையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இத்தனை கொண்டாட்டங்களுக்குள்ளான படம் என்றால் அது மஞ்சுமல் பாய்ஸ் தான். மலையாள படமாக உருவானாலும், தமிழிலும் நல்ல வசூல் வேட்டை படைத்தது என்றே சொல்லலாம்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானது. முழுவதுமாக குணா குகை செட் போடப்பட்டு உருவான இந்த படம் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில், சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், 9 இளைஞர்கள் குணா குகைக்கு சென்று மாட்டி கொள்ளும் கதையை சொல்லுகிறது. குணா குகையின் இயற்பெயர் டெவில்ஸ் கிச்சன். கமல்ஹாசனின் குணா படம் அந்த குகையில் எடுக்கப்பட்ட பிறகே குணா குகை என்ற பெயரால் மக்கள் அறியப்பட்டனர். தொடர்ந்து இந்த ஸ்பாட் அனைவராலும் அறியப்பட்டு அடிக்கடி சுற்றி பார்த்து வந்தனர். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்த குகை ட்ரெண்டாகி வருகிறது.

குழிக்குள் விழுந்த நண்பனை காப்பாற்றும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் அனைத்து ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. மலையாளத்திலேயே வெளியான இந்த படத்திற்கு தமிழிலும் ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது தான் ஆச்சரியம். மொழி அறியாமலும் அனைத்து தரப்பு மக்களாலும் இந்த படம் கவரப்பட்டது.

இதையும் படியுங்கள்:
இளையராஜா பயோபிக்... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு... மேஸ்ட்ரோவாக நடிக்கபோகும் தனுஷ்!
Manjummel Boys

உலகம் முழுவதும் இந்த படமும், பிரேமலு படமும் ஏற்கனவே ரூ.100 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது மஞ்சுமல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் ரூ.176 கோடிக்கு அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக 2018 படத்தின் 175.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்போ மஞ்சுமல் பாய்ஸ் படம் இந்த சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்து முதலிடத்தை பிடித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com