மனோஜ் பாரதிராஜா ரஜினிக்கு டூப் போட்டு ஒரு படத்தில் நடித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் ஒரு பெரிய அலையாக வந்தவர் இயக்குநர் பாரதிராஜா. இவருடைய மகன் மனோஜ் பாரதிராஜா நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் 1999 இல் தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடல் பூக்கள், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், அன்னக்கொடி மற்றும் மாநாடு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் இயக்கிய திரைப்படம் "மார்கழி திங்கள்". இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பாரதிராஜாவும் நடித்துள்ளார்.
மனோஜ் நந்தனாவை மணந்தார். இவர்களுக்கு மதிவதனி பாரதிராஜா மற்றும் ஆர்த்திகா பாரதிராஜா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் சென்னையில் மார்ச் 25, 2025 அன்று தனது 48வது வயதில் காலமானார். விஜய், கார்த்தி, சிவகுமார் போன்ற சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இவர் குறித்த ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆம்! அவர் ஒரு படத்தில் ரஜினிக்கு டூப்பாக நடித்திருக்கிறார்.
எந்திரன் படத்தில் சிட்டி கெட்டிப்பில் ஐஸ்வர்யா ராயுடன் காரை ரஜினி ஓட்டி செல்லும் போது, வசீகரன் கதாபாத்திரத்தில் அருகில் மனோஜ் அமர்ந்திருப்பார். இப்படம் தான் அதிகம் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
ரஜினிகாந்த் ரோபாகவும், விஞ்ஞானியாகவும் நடித்திருப்பார். இப்படத்தில் பல காட்சிகளில் ரோபோவும் விஞ்ஞானியும் ஒரே காட்சியில் தோன்றுவார்கள். அப்போது ரோபோவுக்கு டூப் போட்டிருப்பார்கள். அதில் ரோபோவாக மனோஜ் பாரதிராஜா நடித்திருப்பது போன்ற புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன. இது ரசிகர்களை வியப்படைய செய்திருக்கிறது.