இந்தியாவின் மிகச்சிறந்த 8 குகைக் கோயில்கள் - சென்று வருவோமா?

Temples
Temples

இந்தியாவில் எத்தனையோ முக்தி தரும் கோயில்களும், புண்ணியம் தரும் தலங்களும் நிறைய உள்ளன. அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய அபூர்வ கோவில்கள் எத்தனை எத்தனையோ உள்ளன. அதில் 8 மிகச்சிறந்த குகைக் கோயில்களை பற்றி பார்ப்போம்..

1. அமர்நாத் குகைக் கோயில், காஷ்மீர்

அமர்நாத் குகைக் கோயில்
அமர்நாத் குகைக் கோயில்

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான அமர்நாத் குகையில் தோன்றும் பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள் . காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் சிந்து சமவெளி பகுதியில் 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 60 நாட்கள் மட்டுமே இந்த குகைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

2. வைஷ்ணவி தேவி கோயில், காஷ்மீர்

வைஷ்ணவி தேவி கோயில்
வைஷ்ணவி தேவி கோயில்

காஷ்மீரின் திரிபோட மலைச்சரிவில் அமைந்துள்ளது வைஷ்ணவி தேவி கோயில். இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்தியாவில் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்று. நவராத்திரி காலங்களில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து செல்லும் கோவில். மிக சிறப்பு வாய்ந்தது.

3. பதாமி குகை கோவில், கர்நாடகா

பதாமி குகை கோவில்
பதாமி குகை கோவில்

கர்நாடகாவில் பகல் கோட் மாவட்டத்தில் பதாமி குகை கோயில் அமைந்துள்ளது. சிற்பங்களுக்கு மிகவும் புகழ் பெற்ற கோவில் இதுவாகும். இதன் பழைய பெயர் வாதாபி நகரம். இங்கு பல்வேறு குகைகள் அமைந்துள்ளன. ஒரு குகையில் சிவன் கோயிலும், மற்றொரு குகையில் விஷ்ணு கோவிலும், மற்றொரு குகையில் புத்த மற்றும் ஜெயின் மதசிற்பங்களும் காணப்படுகின்றன.

4. கோடீஸ்வர மகாதேவர் ஆலயம், உத்தரகாண்ட்

கோடீஸ்வர மகாதேவர் ஆலயம்
கோடீஸ்வர மகாதேவர் ஆலயம்

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ர பிரயாக் மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றினை ஒட்டி அமைந்துள்ளது கோடீஸ்வர மகாதேவர் ஆலயம். கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது இக்கோவில். தியானம் செய்வதற்கு உரிய இடமாக அமைந்துள்ளது. பத்மாசூரனை வதம் செய்வதற்கு முன் சிவபெருமான் இந்த குகையில் தங்கி தியானம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

5. பாதாள புவனேஸ்வர் ஆலயம், உத்தரகாண்ட்

பாதாள புவனேஸ்வர் ஆலயம்
பாதாள புவனேஸ்வர் ஆலயம்

உத்தரகாண்ட் மாநிலம் கங்கோலிஹட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பாதாள புவனேஸ்வரர் ஆலயம். இங்கு சிவனின் சிலையும், 33 தேவதைகளும் உள்ளன. குகையின் நுழைவாயிலில் இருந்து 160 மீட்டர் நீளத்திலும் 90 அடி ஆழத்திலும் இந்த குகை கோவில் அமைந்துள்ளது. குறுகலான சுரங்கத்திற்குள் இந்த கோவில் அமைந்துள்ளது.

6. உதயகிரி குகை, மத்திய பிரதேசம்

உதயகிரி குகை
உதயகிரி குகை

மத்திய பிரதேசத்தின் விதிஷா அருகே 20 பாறைகளை ஒன்றாக இணைத்து இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பழமையான சிற்பங்கள் பல உள்ளன. 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த குகை கோவிலில் விஷ்ணு, சிவன் இருவரின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் குப்தர் காலத்தில் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் முக்கியமான தொல்லியல் ஆய்வு தலங்களில் இக்கோவில் ஒன்றாக உள்ளது.

7. கைலாஷ் கோவில், மகாராஷ்டிரா

கைலாஷ் கோவில்
கைலாஷ் கோவில்

மகாராஷ்டிராவின் எல்லோரா குகையில் அமைந்துள்ளது கைலாஷ் கோவில். பாறைகளின் மையத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. உண்மையில் கோவில் மனிதர்களால் கட்டப்பட்டதா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு கோவில் உள்ளது. கிட்டத்தட்ட 2 கி.மீ தூரத்திற்கு இக்கோவிலில் பல்லவ, சாளுக்கிய ஸ்டைலில் அமைந்த சிற்பங்கள் அமைந்துள்ளன.

8. வராஹ குகை கோவில், தமிழ்நாடு

வராஹ குகை கோவில்
வராஹ குகை கோவில்

தமிழகத்தின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது இந்த பாறைகளால் ஆன குகை கோவில். 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகை கோவில், இந்துக்களின் பாறை சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்த கோவில்களில் ஒன்றாகும். இந்த குகையில் விஷ்ணுவின் வராஹ அவதாரத்தை விளக்கும் பல சிற்பங்களும் மகாலட்சுமியின் ஏராளமான சிற்பங்களும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் வெற்றிபெற அன்பும் ஆற்றலும்தான் முக்கியம்!
Temples

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com