ராகோ யோகேந்திரன் இயக்கத்தில், ரக்சன், மாலினி, தீனா, முனீஸ்காந்த் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மறக்குமா நெஞ்சம்.
கார்த்தி,(ரக்சன் ) மாலினா, (பிரியதர்ஷினி ) தீனா இன்னும் சில வகுப்பு தோழர்கள் படித்து முடித்து பத்தாண்டுகள் கழித்து தான் படித்த பள்ளியில் ரீ யுனியன் செய்கிறார்கள்.மூன்று மாதங்கள் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கார்த்தி பத்தாண்டுகள் முன்பு சொல்லாத காதலை பிரியதர்ஷினியிடம் சொல்ல நினைக்கிறார். இந்த காதல் என்ன ஆனது என்பது தான் மறக்குமா நெஞ்சம் படம்.
ஒரு பீல் குட் படமாகவும், ரொமான்டிக் படமாகவும் வந்து இருக்க வேண்டிய இப்படம் சரியான நடிகர்கள் தேர்வு இல்லாதது, திரைக்கதை சுவாரசியம் இல்லாதது போன்ற காரணங்களால் மிக சாதாரண படமாக வந்துள்ளது. ஒரு கட்டதில் ஹீரோவின் காதலை ஹீரோயின் ஏற்று கொண்டால் என்ன? இல்லை என்றால் என்ன?என்று ரசிகர்கள் யோசிக்கும் அளவுக்கு படத்தின் போக்கு இருக்கிறது. மீசையை ட்ரிம் செய்தால் பள்ளி மாணவர்கள் என்று ரசிகர்கள் நம்பி விடுவார்கள் என டைரக்டர் நினைத்து விட்டார் போல.
மாணவர்கள் வேறு எந்த வேறுபாட்டையும் காட்ட வில்லை. மாணவனாக நடிக்கும் போதும் சம காலத்தில் நடிக்கும் போதும் ரக்சன் எந்த வித எக்ஸ் பிரசனையும் காட்ட வில்லை. இசை பக்கம் சென்றால் சச்சின் வாரியர் இளையராஜாவின் பாடல் வரிகளையே பின்னணிக்கு வைத்து விட்டார். கோபி துரை சாமி ஒளிப்பதிவு குளோஸ் அப் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. முனீஸ்காந்த் உடற்பயிற்சி ஆசிரியராக வருகிறார். (நோ கமண்டஸ் ) .
படத்தில் ஒரே ஆறுதலான விஷயம் ஹீரோயின் மாலினாவின் நடிப்புதான். பள்ளி மாணவியாகவும்,கிளைமாக்ஸ்சில் காதலை வெளிப்படுத்தும் போதும் ஒரு நல்ல நடிகை என்பதை உணர்த்துகிறார். சிறந்த கதை கிடைத்து விட்டால் ஒரு சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்.
வெள்ளி திரையியில் ஒரு கனா காணும் காலங்களை காட்ட முயற்சி செய்துள்ளார். மறக்குமா நெஞ்சம் - நினைவில் வைத்து கொள்ளும் படி இல்லை.