மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்... விரைவில் தொடங்கும் ஷூட்டிங்!

Mari Selvaraj - Dhruv Vikram
Mari Selvaraj - Dhruv Vikram

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில் விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில் மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பிஸியானதால் இந்த படம் தாமதமானது. தற்போது அனைத்து ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக தெரிகிறது.

இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'கேப்டன் மில்லர்' இந்தி பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Mari Selvaraj - Dhruv Vikram

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில், மலையாள கதாநாயகிகள் அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகிய இருவரும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. 80 நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com