Mask Movie Review
Mask Movie Review

விமர்சனம்: மாஸ்க் - கவினுக்கு பொருந்தியதா? இல்லையா?

Published on
ரேட்டிங்(3 / 5)

கவின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாஸ்க் (Mask), கடந்த ஓராண்டுகளாக ஒரு சரியான வெற்றிக்காக காத்திருக்கிறார் கவின். கவினுக்கு இந்த மாஸ்க் வெற்றியை தந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

இந்த படத்தை விகர்ணன் அசோக் இயக்கி உள்ளார். ஆண்ட்ரியா தயாரித்து நடித்து உள்ளார்.

படத்தின் முதல் காட்சியில் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் இருந்து தேர்தல் செலவுகளுக்காக பதுக்கி வைக்க்க பட்டிருந்த பல நூறு கோடி பணம், மறைந்த நடிகர் எம் ஆர். ராதா முகமூடி அணிந்த சில மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது.

இந்த பணம் அரசியல் வாதி பவனுக்கு சொந்தமானது. இதை கண்டுபிடிக்க தனியார் டிடெக்ட்டிவ் நபரான கவினும், பல சமூக சேவைகள் செய்யும் ஆண்ட்ரியாவும் வருகிறார்கள். இவரர்கள் இருவரும் தீவிரமாக கொள்ளை அடிக்க பட்ட பணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருமே உண்மையான டிடெக்ட்டிவ் மற்றும் சமூக சேவகர்கள் இல்லை. பசு தோல் போர்த்திய புலி என்று தெரிய வருகிறது. இவர்கள் நோக்கம் என்ன? பணம் கிடைத்ததா? அரசியல் வாதி என்ன செய்தார் என்று சொல்கிறது மீதிக்கதை.

படத்தில் பாராட்ட பட வேண்டிய முக்கிய அம்சம், படம் கதையின் முதலில் இருந்து தொடங்காமல் பாதியிலிருந்து அதாவது பணம் கொள்ளையடிக்கப்படும் காட்சியிலிருந்து துவங்குகிறது. இதுவே இந்த படத்தை தொடர்ந்து பார்க்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றி மாறன் இப்படத்திற்கு சில ஆலேசனைகள் வழங்கியதாக சொல்லப்பட்டது. படத்தில் வரும் டார்க் ஹுமயூர் ஒர்க் அவுட் ஆனதை பார்த்தால் வெற்றி மாறனின் பங்களிப்பு இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

படத்தின் முதல் காட்சியில் தொடங்கும் பரபரப்பு கடைசி வரை குறையவே இல்லை. படத்தில் கதாபாத்திரங்கள் உருவாக்கிய விதமும் நன்றாக உள்ளது. சமூக சேவகி என்ற போர்வையில் ஆண்ட்ரியாவின் இன்னொரு மோசமான பக்கம் தெரியவரும் காட்சி, அமைதியான கேரக்டரில் வரும் சார்லி, வேறொரு மனிதராக வந்து ட்விஸ்ட் தருவது போன்ற இடங்களை சொல்லலாம்.

Mask - Kavin
Kavin

படத்தில் பின்னணியில் இருந்து இயக்கிய இரண்டு முக்கிய ஹீரோக்கள் என்று சொல்லப்போனால் ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் மற்றும் ஜி.வி பிரகாஷை சொல்லலாம். ராஜசேகரின் ஒளிப்பதிவில் கோணங்களும், ஒளியும் கதையை நம்மிடம் சொல்வது போல் உள்ளது. ஜி.வி இசையில் கண்ணுமுழி பாடல் தளம் போட வைக்கிறது. இதுதான் எங்கள் உலகம் ரீமிக்ஸ் பாடல் சூப்பர்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: தீயவர் குலை நடுங்க - பவர் புல் டைட்டில், பட் கதை..?
Mask Movie Review

தனக்கு எப்படியும் ஒரு வெற்றி வேண்டும் என்ற உழைப்பு கவினின் நடிப்பில் தெரிகிறது. இதற்கு முந்தய படங்களில் நடித்ததை விட மாஸ்க் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோவாக நடித்திருந்தாலும் அதற்க்கான இலக்கணங்கள் இல்லாமல் அப்பாவியாக, சிறிது காமெடி கலந்து நடித்துள்ளார் கவின்.

இதையும் படியுங்கள்:
Releasing on November 2115 !! : 100 வருடங்களுக்கு பிறகு பார்ப்பதற்காக 2015ல் எடுக்கப்பட்ட படம்! என்னங்கடா இது?
Mask Movie Review
Mask - Andrea Jeremiah
Andrea Jeremiah

அப்பாவி நபராக வந்து கேரக்டர் மாறும் இடத்தில சபாஷ் போடா வைக்கிறார் சார்லி. ஆண்டிரியா வில்லியாக நடித்தாலும் சற்று டீசெண்டாக காட்டியுள்ளார் டைரக்டர். படத்தின் தயாரிப்பாளர் என்ற காரணமும் இருக்கலாம். ஹீரோயின் ரூஹானி ஓரளவு நடித்திருக்கிறார் .

படத்தில் ஒரு மிகப்பெரிய குறை நடுநடுவே வரும் நெல்சனின் வாய்ஸ் ஓவர் தான். பார்த்தாலே புரியும் திரைக்கதைக்கு வாய்ஸ் ஓவர் என்ற 'கோனார் நோட்ஸ்' எதற்கு? படத்தி நீளமாக இழுக்காமல் இரண்டு மணி நேரம் ஏழு நிமிடத்தில் படம் இருப்பது கூட ஒரு பிளஸ் பாயிண்ட் தான். மாஸ்க் - பெரிய மாஸ் என்று சொல்ல முடியாவிட்டாலும், 'ஓகே, நாட் பேட்' என்று சொல்லும் விதத்தில் வந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com